Saturday, 30 July 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.கீழ்வரும்  உவமையால் விளக்கப் பெறும்
பொருளைத் தேர்வு செய்க: சேல் - போன்ற
அ)பல்
ஆ)முகம்
இ)கண்
ஈ)புருவம்
விடை : இ)கண்
2.உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க
'குன்றின் மேலிட்ட விளக்கு போல"
அ)குழப்பம்
ஆ)பயம்
இ)அச்சம்
ஈ)தெளிவு
விடை : ஈ)தெளிவு
3.'ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
இதில் முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் உள்ள எதுகை
அ)இணi எதுகை
ஆ)பொழிப்பு எதுகை
இ)ஒரூஉ எதுகை
ஈ)கூழை எதுகை
விடை : ஆ)பொழிப்பு எதுகை
4.அடி எதுகையைக் குறிப்பிடுக
'கண் போல நாளும் மறவா நீயும்
எண்ணக் காக்க வேண்டும் தெரிக"
அ)கண்போல - மறவா
ஆ)நாளும் - நீயும்
இ)கண்போல் -எண்ணிக்காக்க
ஈ)காக்க - தெரிக
விடை : இ)கண்போல் -எண்ணிக்காக்க
5.'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்"
இதில் அமைந்துள்ள மோனை
அ)கூழை மோனை
ஆ)பொழிப்பு மோனை
இ)இணை மோனை
ஈ)மேற்கதுவாய் மோனை
விடை : ஆ)பொழிப்பு மோனை
6.'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு" - இணை மோனையைக் கண்டறிக
அ)நிறைநீர - நீரவர்
ஆ)நீரவர் - கேண்மை
இ)பிறைமதி - நட்பு
ஈ)பேதையார் - நட்பு
விடை : அ)நிறைநீர - நீரவர்
7.கையினாற துணிந்தபோது கடலெனக் கதறி வீழ்ந்து - மோனைச் சொற்களைக் கண்டறிக
அ)கையினாற் - கடலென
ஆ)கையினாற் துணிந்த
இ)கதறி - வீழ்ந்து
ஈ)துணிந்து - போது
விடை : அ)கையினாற் - கடலென
8.அடி இயைபுத் தொடையைக் குறிப்பிடுக
'திங்கள் முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை"
அ)திங்கள் -தென்றல்
ஆ)சூடுமலை - ஆடுமலை
இ)சூடு -திங்கள்
ஈ)முடி - விளை
விடை : ஆ)சூடுமலை - ஆடுமலை
9.'படையும் கொடியும் குடையும் முரசும்' - இதில் எவ்வகை எதுகை அமைந்துள்ளது?
அ)இணை எதுகை
ஆ)பொழிப்பு எதுகை
இ)ஒரு எதுகை
ஈ)கூழை எதுகை
விடை : ஆ)பொழிப்பு எதுகை
10.எதுகையைக் கண்டறிக
அ)கற்க - நிற்க
ஆ)கற்க - கல்வி
இ)கல்வி - கசடற
ஈ)கசடற - கற்க
விடை : அ)கற்க - நிற்க



No comments:

Post a Comment