Saturday, 30 July 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.'நேற்று பெருமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் பெருகியோடியது"- இது எவ்வகை வாக்கியம்
அ)கலவை வாக்கியம்
ஆ)தனிநிலை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : அ)கலவை வாக்கியம்
12.'சித்த வைத்தியத்திற்கென ஒரு வாரியம் அமைய வேண்டும் " இது எவ்வகை வாக்கியம்?
அ)விழைவு வாக்கியம்
ஆ)வியங்கோள் வாக்கியம்
இ)வியப்பு வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)விழைவு வாக்கியம்
13.வாக்கியம் வகையறிக
'நம் நாட்டு மக்களுக்கு ஆங்கில அரசால் பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டன"
அ)தன்வினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
14.'நம்பி நாடகம் நடித்தான் '- எவ்வகை வாக்கியம்?
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : அ)செய்வினை வாக்கியம்
15.'பாரதியார்'பாஞ்சாலி சபதத்தை'இயற்றினார்"
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)எதிர்மறை வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : அ)செய்வினை வாக்கியம்
16.'ஒவியம் ஆசிரியரால் வரையப்பட்டது"- எவ்வகை வாக்கியம்?
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
17.'செந்தமிழைக் கற்பித்தேன்'- எவ்வகை வாக்கியம்?
அ)பிறவினை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்;
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : அ)பிறவினை வாக்கியம்
18.'குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார் - இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
அ)பிறவினை
ஆ)உடன்பாட்டு வினை
இ)எதிர்மறை வினை
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : ஆ)உடன்பாட்டு வினை
19.'கீரியும் பாம்பும் போல" - உவமை கூறும் பொருள் தெளிக
அ)வேற்றுமை
ஆ)ஒற்றுமை
இ)பகைமை
ஈ)நட்பு
விடை : இ)பகைமை
20.உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்க 'அத்திப்பூத்தாற் போல"
அ)ஏமாற்றம்
ஆ)அருமை
இ)உண்மை
ஈ)நம்பிக்கை
விடை : ஆ)அருமை 



No comments:

Post a Comment