Saturday, 30 July 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.விடைக்கேற்ற சரியான வினாவைக் கண்டறிக
'சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர் ஆவார்"
அ)திருத்தக்க தேவர் யார்?
ஆ)சீவக சிந்தாமணியின் வேறு பெயர் என்ன?
இ)சீவக சிந்தாமணிஐய இயற்றியவர் யார்?
ஈ)திருத்தக்க தேவர் எந்நூலை எழுதுவார்?
விடை : இ)சீவக சிந்தாமணிஐய இயற்றியவர் யார்?
22.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'இளமையில் கல்வியைக் கற்க வேண்டும்"
அ)சங்க இலக்கியம் என்பது யாது?
ஆ)கல்வியின் பயன் யாது?
இ)இளமையில் எதனைக் கற்க வேண்டும்
ஈ)கல்வியைக் கற்க வேண்டுமா?
விடை : இ)இளமையில் எதனைக் கற்க வேண்டும்
23.விடைக்கேற்ற வினாத் தொடரைக் குறிப்பிடுக
'இயற்கையைச் சார்ந்தே மனம் இயங்குகிறது"
என்பதைச் சங்க இலக்கியம் அறுதியிடுகிறது?
அ)சங்க இலக்கியம் என்பது யாது ?
ஆ)மனம் எவ்வாறு இயங்குகிறது எனச சங்க இலக்கியம் அறுதியிடுகிறது?
இ)மனம் இயற்கையைச் சார்ந்ததா?
ஈ)சங்க இலக்கியம் மனதை அளிக்கிறதா?
விடை : ஆ)மனம் எவ்வாறு இயங்குகிறது எனச சங்க இலக்கியம் அறுதியிடுகிறது?
24.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்
'எனக்குப் பத்துப் புத்தகம் தேவை"
அ)உனக்கு எத்தனைப் புத்தகம் தேவை?
ஆ)எனக்கு புத்தகம் தேவையா?
இ)எனக்கு ஏன் புத்தகம் தேவை?
ஈ)எனக்கு எவ்வளவு புத்தகம் தேவை?
விடை : அ)உனக்கு எத்தனைப் புத்தகம் தேவை?
25.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுக்க
'தாயைப் பெண் தெய்வம் என்று போற்றுதல் வேண்டும்"
அ)பெண் தெய்வம் யார்?
ஆ)பெண்ணை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?
இ)தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்
ஈ)தாயை போற்ற வேண்டுமா?
விடை : இ)தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்
26.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
உ.வே.சாமிநாதய்யர் தமிழ்த்தாத்தா என்று அழைக்கப் படுகின்றார்?
அ)உ.வே.சாமிநாதய்யர் எவ்வாறு அழைக்கப் படுகின்றார்
ஆ)தமிழ்த்தாத்தா என்றால் என்ன?
இ)உ.வே.சாமிநாதய்யர் யார்?
ஈ)உ.வே.சாமிநாதய்யர் செய்த தமிழ்ப்பணி யாது?
விடை : அ)உ.வே.சாமிநாதய்யர் எவ்வாறு அழைக்கப் படுகின்றார்
27.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'கவனமாகப் படி" என ஆசிரியர் கூறினார்.
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)நேர்கூற்று வாக்கியம்
விடை : ஈ)நேர்கூற்று வாக்கியம்
28.எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
'உம்மைத் திருத்திக் கொண்டால் மட்டும் போதது, ஊரையும் திருத்துக"
அ)உணாச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்
29.நேற்று வந்திலை - எவ்வகை வாக்கியம் எனக் காண்க
அ)நேர்கூற்று வாக்கியம்
ஆ)அயற்கூற்று வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)உடன்பாட்டு வாக்கியம்
விடை : இ)எதிர்மறை வாக்கியம்
30.'அய்யே!அய்யோ! என் கழனியை எல்லாம் புலி அழிக்கிறதே" இது எவ்வகை வாக்கியம்
அ)வினா வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம் 



No comments:

Post a Comment