Friday, 29 July 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பெயர்ச்சொல்லின் வகை கூறுக
கந்தனின் கால் ஒடிந்தது
அ)சினைப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)பண்பாகு பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : அ)சினைப்பெயர்
12.பெயர்ச்சொல்லின் வகை கூறுக
கார் அறுத்தான் கார் என்பது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்
13.சொல்லின் வகை அறிக - விளையாட்டு
அ)தொழிற்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்
14.மைதானம் - எவ்வகைப் பெயர்ச்சொல்?
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்
15.இலக்கணக் குறிப்பறிக - அறியா
அ)ஈறுகொட்ட எதிர்மறை பெயரெச்சம்
ஆ)வினைத்தொகை
இ)பண்புத்தொகை
ஈ)உரிச்சொல்
விடை : அ)ஈறுகொட்ட எதிர்மறை பெயரெச்சம்
16.இலக்கணக் குறிப்பறிக - சலசல
அ)இரட்டைக் கிளவி
ஆ)அடுக்குத் தொடர்
இ)பெயரெச்சம்
ஈ)வினையெச்சம்
விடை : அ)இரட்டைக் கிளவி
17.இலக்கணக் குறிப்பறிக - காய்கதிர்
அ)பண்புத் தொகை
ஆ)வினைத் தொகை
இ)வினையாலணையும் பெயர்
ஈ)உரிச்சொல்
விடை : ஆ)வினைத் தொகை
18.இலக்கணக் குறிப்பறிக - செந்தமிழ்
அ)வினைத்தொகை
ஆ)உரிச்சொல்
இ)பண்புத் தொகை
ஈ)ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
விடை : இ)பண்புத் தொகை
19.இலக்கணக் குறிப்பறிக - தீதும் நன்றும்
அ)பண்புத் தொகை
ஆ)வினைத் தொகை
இ)எண்ணும்மை
ஈ)உவமைத்தொகை
விடை : இ)எண்ணும்மை
20.காய்கறி - இதன் இலக்கணக் குறிப்பு யாது?
அ)வினைத்தொகை
ஆ)உம்மைத் தொகை
இ)வெற்றுமைத் தொகை
ஈ)உவமைத் தோகை
விடை : ஆ)உம்மைத் தொகை



No comments:

Post a Comment