Thursday, 7 July 2016

47.10-ஆம் வகுப்பு | தமிழ்

1941.10-ஆம் வகுப்பு | தமிழ் |காத்தவராயன் யாரிடம் கல்வி பயின்றார்?
அயோத்திதாசப் பண்டிதர்
1942.10-ஆம் வகுப்பு | தமிழ் |காத்தவராயன் பயின்ற பாடம் எது?
சித்த மருத்துவம்
1943.10-ஆம் வகுப்பு | தமிழ் |காத்தவராயன் யாருடைய பெயரை தம் பெயராக வைத்துக் கொண்டார்?
தம் ஆசிரியர் அயோத்திதாசப் பண்டிதர்
1944.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசர் தொடங்கிய இதழின் பெயர் என்ன?
ஒரு பைசாத் தமிழன்
1945.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசர் நீலகிரி மலைப் பகுதியில் வாழும் _____ இனப்பிரிவில் கலப்புத் திருமணம் செய்துகொண்டார்.
தோடர்
1946.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசர் திருமணம் செய்து கொண்டு பத்து ஆண்டுகள் எங்கு சென்று வாழ்ந்தார்?.
இரங்கூன்
1947.10-ஆம் வகுப்பு | தமிழ் |தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அயோத்திதாசர் பிரம்ம ஞானசபை ஆல்காட் (1832 – 1907) தொடர்பால் சென்னையில் ஆல்காட் _____ இலவசப் பள்ளிகளை நிறுவினார்.
பஞ்சமர் பள்ளிகள்
1948.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் இதழின் விலை எவ்வளவாக இருந்தது?
காலணா
1949.10-ஆம் வகுப்பு | தமிழ் |"ஒருபைசாத் தமிழன்" பத்திரிக்கை சென்னை இராயப்பேட்டையில் இருந்து புதன் தோறும் நான்கு பக்கங்களாக எந்த ஆண்டிலிருந்து வெளிவரத் தொடங்கியது?
19-06-1907-ஆம் ஆண்டு
1950.10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நாட்டில் நுகர்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாகத்தான் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்?
ஜப்பான்
1951.10-ஆம் வகுப்பு | தமிழ் |புத்தரது ஆதிவேதம் என்ற நூலை இருபத்தெட்டுக்காதைகள் கொண்ட பெருநூலாக வெளியிட்டவர் யார்?
அயோத்திதாசர்
1952.10-ஆம் வகுப்பு | தமிழ் |"இந்திர தேச சரித்திரம்" என்ற நூலை எழுதியவர் யார்?
அயோத்திதாசர்
1953.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசர் இறந்த ஆண்டு எது?
1914 மே மாதம் 5-ஆம் நாள்
1954.10-ஆம் வகுப்பு | தமிழ் |"தென்னிந்தியச் சமூகச் சீர்த்திருத்தத்தின் தந்தை" என்று புகழ் பெற்றவர் யார்?
அயோத்திதாசர்
1955.10-ஆம் வகுப்பு | தமிழ் |"பா" எத்தனை வகைப்படும்?
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என "பா" நான்கு வகைப்படும்.
1956.10-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, இரண்டு அடிகளைக் கொண்டதாய், ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் வருவது _____ ஆகும்.
குறள் வெண்பா
1957.10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த பல்கலைக் கழகத்தில் சாலை இளந்திரையன் தமிழ்துறை தலைவராகவும், பேராசியராகவும் இருந்தார்?
தில்லி பல்கலைக்கழகம்
1958.10-ஆம் வகுப்பு | தமிழ் |சாலை இளந்திரையன் எங்கு பிறந்தார்?
திருநெல்வேலி மாவட்டம் சாலை நயினார் பள்ளிவாசல்
1959.10-ஆம் வகுப்பு | தமிழ் |"பாவேந்தர் விருது" சாலை இளந்திரையனுக்கு தமிழக அரசு எந்த ஆண்டு வழங்கியது?
1991-ஆம் ஆண்டு.
1960.10-ஆம் வகுப்பு | தமிழ் |சாலை இளந்திரையன் வாழ்ந்த காலம் எது?
06-09-1930 முதல் 04-10-1998 வரை




No comments:

Post a comment