Saturday, 16 July 2016

47.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்

தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களை கண்டெழுதுதல்
41.கீழ்கண்டவற்றில் தன்வினை வாக்கியம் எது?
அ)கந்தன் திருத்தினான்
ஆ)கந்தன் திருந்தினான்
இ)கந்தன் உருட்டினான்
ஈ)கந்தன கற்பித்தான்
விடை : ஆ)கந்தன் திருந்தினான்

42.அமர்ந்தான் என்பது எவ்வகை வாக்கியம்?
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)குறிப்புவினை
ஈ)செய்வினை
விடை : ஆ)தன்வினை

43.கீழ்க்கண்டவற்றறுள் பிறவினை வாக்கியம் எது ?
அ)சுசீலா பழகினாள்
ஆ)சுசீலா பழக்கினாள்
இ)சுசீலா படித்தாள்
ஈ)சுசீலா எழுந்தாள்
விடை : ஆ)சுசீலா பழக்கினாள்

44.பாடம் பயில் - இதன் பிறவினை எது?
அ)பாடம் கல்
ஆ)பாடம் பயில்வோம்
இ)பாடம் பயின்றேன்
ஈ)பாடம் பயிற்றுவி
விடை : ஈ)பாடம் பயிற்றுவி

45.கீழ்கண்டவற்றுள் செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)பாடம் முருகனால் படிக்கப்ட்டது
ஆ)முருகன் பாடம் படித்தான்
இ)முருகன் பாடம் படித்தானா?
ஈ)முருகன் பாடம்  படிப்பித்தான்
விடை : ஆ)முருகன் பாடம் படித்தான்

46.பரிசு தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது
இதைச் செய்வினை வாக்கியமாக மாற்றுக
அ)தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார்
ஆ)பரிசு தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது
இ)பரிசு தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது
ஈ)தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார்?
விடை : ஈ)தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார்?

47.கீழ்கண்டவற்றறுள் செயப்பாட்டுவினை வாக்கியம் எது ?
அ)பாலன் மரத்தை வெட்டினான்
ஆ)பாலன் மரத்தை வெட்டுவித்தான்
இ)மரம் பாலனால் வெட்டப்பட்டது
ஈ)பாலன் மரத்தை வெட்டிலன்
விடை : இ)மரம் பாலனால் வெட்டப்பட்டது

48.கடந்ததை எண்ணி வருந்தினான் - இது எவ்வகை வாக்கியம் ?
அ)பிறவினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டுவினை வாக்கியம்
விடை : ஆ)தன்வினை வாக்கியம்

49.மாணவன் அடங்கினான் - இது எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
அ)எச்சவினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)தன்வினை
விடை : ஈ)தன்வினை

50.ஆசிரியர் கற்பிக்கிறார் - இது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஈ)பிறவினை வாக்கியம்



No comments:

Post a comment