Monday, 25 July 2016

6.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. குத்புதீன் ஐபக் தன் வாழ்க்கையை எவ்வாறு தொடங்கினார்?
அ) படைவீரராக
ஆ) அடிமையாக
இ) தளபதியாக            
ஈ) மன்னராக
விடை: ஆ) அடிமையாக
42. இல்துமிஷ்க்குப் பிறகு ஆட்சி செய்தவர் யார்?
அ) நசுருதீன்                          
ஆ) இராமச்சந்திர தேவர்
இ) சுல்தானா இரசியா
ஈ) சிக்கந்தர் லோடி
விடை:  இ) சுல்தானா இரசியா
43. சித்தூர் ராணிபத்மினியின் கணவர் யார்?
அ) பீம்சிங்                    
ஆ) ராணாராம்தேவ்
இ) பல்வீர்சிங்
ஈ) ராம்சிங்
விடை: அ) பீம்சிங்                    
44. துக்ளக் மரபைத் தோற்றுவித்தவர் யார்?
அ) முகம்மது பின் துக்ளக்     
ஆ) கியாசுதீன் துக்ளக்
இ) பெரோஸ்ஷா
ஈ) பெரோஸ்கான்
விடை: ஆ) கியாசுதீன் துக்ளக்
45. அடிமைகளின் மேம்பாட்டிற்காக தனி அமைத்  தோற்றுவித்தவர் யார்?
அ) பெரோஸ் துக்ளக்  
ஆ) முகமது பின் துக்ளக்
இ) அலாவுதீன் கில்ஜி
ஈ) மாலிக்காபூர்
விடை: அ) பெரோஸ் துக்ளக்  
46. டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்?
அ) பக்தியார் கில்ஜி              
ஆ) குத்புதீன் ஐபெக்
இ) பால்பன்
ஈ) மாலிக்காபூர்
விடை: ஆ) குத்புதீன் ஐபெக்
47. அலாவுதீன் கில்ஜியால் தோற்கடிக்கப்பட்ட தேவகிரியின் மன்னர் யார்?
அ) பிருதிவிராஜன்
ஆ) விசால் தேவர்
இ) இராமச்சந்திர தேவர்
ஈ) குத்புதீன் முபாரக்
விடை:  இ) இராமச்சந்திர தேவர்
48. அலாவுதீன் கில்ஜி டெல்லிக்கு அருகில் நிறுவிய புதிய நகர் எது?
அ) கிரி                                   
ஆ) சிரி
இ) அலாவுதீன் பாத்              
ஈ) பெரோஷா பாத்
விடை: ஆ) சிரி
49. முகமது பின் துக்ளக் டெல்லியிலிருந்து தலைநகரை எங்கு மாற்றினார்?
அ) கல்கத்தா                          
ஆ) அமகது நகர்
இ) அஜ்மீர்                             
ஈ) தேவகிரி
விடை: ஈ) தேவகிரி
50. தைமூரால் அழிக்கப்பட்ட இந்திய நகரம் எது?
அ) தௌலதாபாத்                  
ஆ) தேவகிரி
இ) டெல்லி
ஈ) ஜான்பூர்
விடை:  இ) டெல்லி 



No comments:

Post a Comment