Friday, 29 July 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.விடைக்கேற்ற் வினாவைத் தோந்தெடுத்தல்
'உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும்"
அ)யாரை உள்ளளவும் நினைக்க வேண்டும்?
ஆ)எதை உள்ளவும் நினைக்க வேண்டும்?
இ)எதனை உள்ளவும் நினைக்க வேண்டும்?
ஈ)எப்பொழுது உள்ளவும் நினைக்க வேண்டும்?
விடை : அ)யாரை உள்ளளவும் நினைக்க வேண்டும்?
92.எவ்வகை வாக்கியம் எனத் தேர்வு செய்க
'என்னே! இயற்கை அழகு"
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்
93.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'நல்லொழுக்கத்தைக் கடை பிடி"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்
94.எவ்வகை வாக்யிம் எனக் கண்டெழுதுதல்
'மக்களின் வாழ்க்கை முறைகள் வல மாறுதல்களைக் கண்டுவிட்டன"
அ)கலவை வாக்கியம்
ஆ) தொடர் வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்
95.மகாபலிபுரச் சிற்பங்கள் மிகவும் அழகாக உள்ளன
இத்தொடர் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
அ)வினா வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்
96.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
'ஐயகோ!  பழி பாவத்திற்கு ஆளாகி விட்டேனே!
அ)தனி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்
97.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
நான் உணவு உண்ண மாட்டேன்
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)எதிர்மறை வாக்கியம்
98.'கந்தன் ஒடினான்'- இது எவ்வகை வாக்கியம்
அ)செய்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)தன்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)தன்வினை
99.தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள் " எவ்வகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை
100.சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றது"
எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
அ)செய்வினை
ஆ)எதிர்மறை வினை
இ)தன்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை



No comments:

Post a Comment