Saturday, 30 July 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.'செல்"என்ற அடிச்சொல்லில் தோன்றிய வினையெச்சம்
அ)சென்றாய்
ஆ)செல்வாயோ
இ)சென்று
ஈ)செல்லா நின்றனர்
விடை : இ)சென்று
2.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக 'காண்"
அ)கண்டான்
ஆ)காண்க
இ)கண்ட
ஈ)கண்டு
விடை : ஈ)கண்டு
3.வேர்ச்சொல்லை படர்க்கை பெண்பால் வினைமுற்றாக்குக :'நடி"
அ)நடித்தார்
ஆ)நடித்தாள்
இ)நடித்தல்
ஈ)நடிப்பாள்
விடை : ஆ)நடித்தாள்
4.'கூறு"என்பதன் ஏவல் ஓருமை வினைமுற்று
அ)கூறுதல்
ஆ)கூறுதி
இ)கூறினான்
ஈ)கூற
விடை : ஆ)கூறுதி
5.வேர்ச்சொல்லில் இருந்து வினையாலணையும் பெயர் தருக 'நடி"
அ)நடித்து
ஆ)நடித்தல்
இ)நடித்தது
ஈ)நடித்தவனை
விடை : ஈ)நடித்தவனை
6.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக : 'நில்"
அ)நின்று
ஆ)நின்ற
இ)நிற்றல்
ஈ)நின்றான்
விடை : இ)நிற்றல்
7.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)கூடை,குடை,கொடை,கோடை
ஆ)கோடை,குடை,கூடை,கொடை
இ)கொடை,கூடை,குடை,கொடை
ஈ)குடை,கூடை,கொடை,கோடை
விடை : ஈ)குடை,கூடை,கொடை,கோடை
8.அகர வரிசைப்படி உள்ள சொற்களை கண்டுபிடிக்கவும்
அ)தமிழ்,தாய்,தூண்,தெய்வம்
ஆ)கற்கண்டு,கழவி,கீதை,காற்று
இ)அன்னை,இலை,உணவு,ஆசை
ஈ)களை,உரம்,நீர்,மண்.
விடை : அ)தமிழ்,தாய்,தூண்,தெய்வம்
9.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)அன்பு,ஈதல்,ஊக்கம்,உவகை
ஆ)ஈதல்,அன்பு,ஊக்கம்,உவகை
இ)அன்பு,ஈதல்,உவகை,ஊக்கம்
ஈ)உக்கம்,ஈதல்,உவகை,அன்பு
விடை : இ)அன்பு,ஈதல்,உவகை,ஊக்கம்
10.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)ஊசி,ஞானம்,காகம்,அச்சுதன்
ஆ)அச்சுதன்,ஊசி,ஞானம்,காகம்
இ)ஞானம்,காகம்,அச்சுதன்,ஊசி
ஈ)அச்சதன்,ஊசி,காகம்,ஞானம்
விடை : ஈ)அச்சதன்,ஊசி,காகம்,ஞானம்



No comments:

Post a Comment