Friday, 12 August 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81. ஐயோ பாம்பு - எவ்வகை வாக்கியம்?
அ)எதிர்மறை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்

82.ஆ இயற்கை அழகுமனங்குளிர மகிழ்விக்கிறதே வாக்கியவகை தெளிக
அ)கட்டளை
ஆ)வினா
இ)வியப்பு- உணர்ச்சி
ஈ)வியங்கோள்
விடை : இ)வியப்பு- உணர்ச்சி

83.வாக்கிய வகை கண்டுணர்க
அந்தோ ஏழைகளை செல்வர் புறக்கணித்தனரே
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)வியங்கோள் வாக்கியம்
விடை : அ)உணர்ச்சி வாக்கியம்

84.என்ன வாக்கியம் என்று கண்டு வட்டமிடுக ஆசியப் போட்டியில் பதக்கக் குவிப்பில் முதலிடம் பெற்ற சீனாவின் சாதனைதான் என்னே!
அ)செய்தி
ஆ)வினா
இ)உணர்ச்சி
ஈ)விழைவு
விடை : இ)உணர்ச்சி

85.நான் வருகின்றேன் - இது எவ்வகை வாக்கியம்?
அ)எதிர்மறை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)முன்னிலை வாக்கியம்
விடை : ஆ)உடன்பாட்டு வாக்கியம்

86.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
நான் கொடுப்பேன்
அ)எதிமறை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)உடன்பாட்டு வாக்கியம்

87.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)உடன்பாட்டு வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)உடன்பாட்டு வாக்கியம்

88.எவ்வகை வாக்கியம் எனக் காண்க
நேற்று மாலை மழை பொழிந்தில
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : இ)எதிர்மறை வாக்கியம்

89. காந்தியடிகள் பொய் பேசுவார் இது எவ்வகை வாக்கியம்?
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : ஆ)எதிர்மறை வாக்கியம்

90.பொன்னி சோறு உண்டிலள்
இது எவ்வகை வாக்கியம்
அ)வினா வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)எதிர்மறை வாக்கியம்



No comments:

Post a Comment