Wednesday, 17 August 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சாலைகளில் பல தொழல்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழெழுந்து முழங்கவேண்டும் என்ற கவிமணியின் கவிதைகளில் எவை வளம்பெற வேண்டுமென பேசுகிறார்?
அ)தொழிலும் பணியும்
ஆ)தொழிலும் தமிழும்
இ)தமிழும் கல்வியும்
ஈ)தமிழும் நூலும்
விடை : இ)தமிழும் கல்வியும்

22.இவரது கவிதைகளில் காந்திய சிந்தனைகள் மிளிர்கின்றன
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)நாமக்கல் இராமலிங்கனார்
ஈ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விடை : இ)நாமக்கல் இராமலிங்கனார்

23.மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என பாடியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
ஈ)நாமக்கல் இராமலிங்கனார்
விடை : இ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

24.தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என பாடியவர்
அ)கவிமணி
ஆ)நாமக்கல் கவிஞர்
இ)பாரதியார்
ஈ)பாரதிதாசன்
விடை : ஆ)நாமக்கல் கவிஞர்

25.அமெரிக்க கவிஞர் வால்ட்விட்மனின் சாயலில் வசன கவிதை எழுதியாவ்?
அ)பாரதிதாசன் சுரதா
ஆ)சுரதா
இ)பாரதிதாசன்
ஈ)பாரதியார்
விடை : ஈ)பாரதியார்

26.இவரின் உரைநடைகள் அனைத்தும் கவிதைநடை கொண்டவை
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கவிமணி
ஈ)நாமக்கல் இராமலிங்கனார்
விடை : ஆ)பாரதிதாசன்

27.கவிமணி தேசிக விநாயகனார் பிறந்த ஊர் எது?
அ)போரூர்
ஆ)தேரூர்
இ)அரியூர்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ)தேரூர்

28.கவிமணி உமர்கய்யாம் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்தார் உமர்கய்யாம் என்பவர் ஒரு
அ)மராட்டியக் கவிஞர்
ஆ)உருது கவிஞர்
இ)பாரசீகக் கவிஞர்
ஈ)வங்கக் கவிஞர்
விடை : இ)பாரசீகக் கவிஞர்

29.இவற்றில் கவிமணி எழுதிய நூல் எது?
அ)மலரும் மாலையும்
ஆ)மருமக்கள் வழி மான்மியம்
இ)ஆசிய ஜோதி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

30.பாரதிதாசன் பெயரில் எங்கு பல்கலைக் கழகம் அமைந்துள்ளது?
அ)தஞ்சாவூர்
ஆ)நாகப்பட்டினம்
இ)திருச்சிராப்பள்ளி
ஈ)கோயம்புத்தூர்
விடை :இ)திருச்சிராப்பள்ளி




No comments:

Post a Comment