Sunday, 7 August 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க 'மழை கண்ட பயிர் போல"
அ)அச்சம்
ஆ)மகிழ்ச்சி
இ)சினம்
ஈ)பெருமிதம்
விடை : ஆ)மகிழ்ச்சி

2.உவமையால் விளக்கப்பெறும் பொரள் அறிக
'கடலில் கரைத்த பொருங்காயம் போல"
அ)பயன்பட்டது
ஆ)பண்பட்டது
இ)பயனற்றது
ஈ)பசுமையானது
விடை : இ)பயனற்றது

3.உவமையால் விளக்கப்பெறம் பொரள் அறிக
'கல்மேல் எழுத்துப் போல"
அ)உறுதியாக
ஆ)அழுத்தமாக
இ)அழியாமல்
ஈ)கடினமாக
விடை : அ)உறுதியாக

4.'தாயைக் கண்ட சேயைப் போல"
உவமையால் விளக்கப்படும் பொருள் அறிக
அ)நகை
ஆ)அழுகை
இ)சினம்
ஈ)மகிழ்ச்சி
விடை : ஈ)மகிழ்ச்சி

5.'அடியற்ற மரம் போல" - இந்த உவமை எதனை விளக்குகிறது?
அ)உறுதி
ஆ)துன்பம்
இ)மகிழ்ச்சி
ஈ)காற்று
விடை : ஆ)துன்பம்

6.கீழ்காணும் அடிகளிலுள்ள எதுகையைச் சுட்டுக.
ஆற்றல் தரும் அணுபிளந்தார் - அந்த
ஆற்றலினாற் பேரண்டங்கள் யாவும் அளந்தார்.
அ)ஆற்றல தரும்  - ஆற்றலினாற்
ஆ)அணுபிறந்தார் - ஆற்றலினாற்
இ)பேரண்டஙகள் - அளந்தார்
ஈ)தரும்   - யாவும்
விடை : அ)ஆற்றல தரும்  - ஆற்றலினாற்

7.பாரதநாடு பார்க்கெலாம் திகலம் - இதில் அமைந்துள்ள மோனையைச் சுட்டுக
அ)பாரதநாடு - திலகம்
ஆ)பார்க் - நாடு
இ)நாடு - திலகம்
ஈ)பாரதநாடு - பார்க்கெல்லாம்
விடை : ஈ)பாரதநாடு - பார்க்கெல்லாம்

8.'ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடைய னுழை
-இக்குறளில் அடி எதுகையைக் கண்டறிக
அ)ஆக்கம் - அசைவிலா
ஆ)அதர்வினாய்ச் ச- செல்லும்
இ)ஊக்க - முடையா
ஈ)ஆக்கம் - ஊக்கம்
விடை : ஈ)ஆக்கம் - ஊக்கம்

9.'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலக" - இதல் அமைந்துள்ள எதுகை யாது?
அ)முதல - முதற்றே
ஆ)ஆதி - உலக
இ)பகவன் - எழுத்தெல்லாம்
ஈ)அகர - பகவன்
விடை : ஈ)அகர - பகவன்

10.'கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம் நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்"
- இயைபுச் சொற்களைக் காண்க
அ)கலை  - நிலை
ஆ)புணையாம் - துணையம்
இ)கலை  - கடல்
ஈ)நிலை  - நிகர்
விடை : ஆ)புணையாம் - துணையம்




No comments:

Post a Comment