Thursday, 11 August 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.தடித்த சொல்லிற்கு வேர்ச்சொல் காண்க இரகு பழம் உண்கிறான்
அ)ஆன்
ஆ)உண்
இ)பழம்
ஈ)ஊண்
விடை : ஆ)உண்

12.கோடிட்ட சொல்லிற்கு வேர்ச்சொல் காண்க
இராமன் பட்ட பாடு எனக்குத் தெரியும்
அ)இராமன்
ஆ)படு
இ)தெரியும்
ஈ)படுதல்
விடை : ஆ)படு

13.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க (பகுதியை) செல்வான்
அ)சென்ற
ஆ)செல்
இ)சென்று
ஈ)செல்கிற
விடை : ஆ)செல்

14.வெர்ச்சொல்லைத் தேர்க - கண்டு
அ)கண்
ஆ)காண்டு
இ)காண்
ஈ)காண்க
விடை : இ)காண்

15.வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - கண்டான்
அ)கண்டது
ஆ)கண்டன
இ)காண்
ஈ)காண்புன
விடை : இ)காண்

16.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - பார்த்தான்
அ)பார்வை
ஆ)பார்த்தது
இ)பார்த்து
ஈ)பார்
விடை : ஈ)பார்

17.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - கெடுத்தாள்
அ)கெடு
ஆ)கெட்ட
இ)கெடுத்த
ஈ)கெடுத்தது
விடை : அ)கெடு

18.சென்றனர் - இதன் வேர்ச்சொல் எது?
அ)செல்
ஆ)சென்று
இ)சென்
ஈ)செல்லு
விடை : அ)செல்

19.வேர்ச்சொல்லை தேர்ந்தெடு - வந்தாள்
அ)வந்த
ஆ)வந்து
இ)வா
ஈ)வரு
விடை : இ)வா

20.வேர்ச்சொல்லை தேர்ந்தெடு - தந்தான்
அ)தரு
ஆ)தா
இ)தந்து
ஈ)தந்த
விடை : ஆ)தா



No comments:

Post a Comment