Sunday, 7 August 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.எவ்வகை வாக்கியம் எனத் தேர்வு செய்க 'கந்தா இவ்வேலையைச் செய்"
அ)வினா வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கயிம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

12.'இளங்கோவடிகள் கதை கேட்டார் கருத்தில் வைத்தார் காவியம் படைத்தார்" எவ்வகை வாக்கியம் எனக் குறிப்பிடுக
அ)தொடர் வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)உணாச்சி வாக்கியம்
விடை : அ)தொடர் வாக்கியம்

13.'பூம்புகார்"சிற்பங்கள் மிகவும் அழகாய் உள்ளனவா?
- இது எவ்வகை வாக்கியம்
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்

14.'திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் - எவ்வகை வாக்கியம்
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்

15.'ஐயோ! அண்ணா அவர்கள் மறைந்தாரே! எவ்வகை வாக்கியம்?
அ)கலவை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

16.'செல்வன் பாடம் கற்றான்" - வாக்கியத்தின் வகை அறிக
அ)எதிர்மறை வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செய்பினை
விடை : ஆ)தன்வினை

17.'பூங்கோதை பொம்மை செய்வித்தாள் " - வினைத் சொல்லின் வகை அறிக
அ)எதிர்மறை வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செய்வினை
விடை : இ)பிறவினை

18.இராமன் மரத்தை வெட்டினான்- இது எவ்வகை வாக்கியம்?
அ)கலவை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : ஆ)செய்வினை வாக்கியம்

19.சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது - இது எவ்வகை வாக்கியம்?
அ)கலவை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : இ)செயப்பாட்டு வினை வாக்கியம்

20.'மழைநீர் மக்களால் சேமிக்கப்பட்டது வாக்கியத்தின் வகை அறிக
அ)எதிர்மறை வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை




No comments:

Post a Comment