Tuesday, 9 August 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பின்வரும் தொடரில் உள்ள இயைபைக் காண்க 'மண்டுமிருள் குணத்தவரேன் மடமைதன்னை வளர்க்கின்றார் ?
நல்லபுனல் குளத்தினிலேன் நஞ்சதனைக் கலக்கின்றார்?
அ)மண்டுமிருள்  - மடமைதன்னை
ஆ)மண்டுமிருள்  - வளர்க்கின்றார்?
இ)நல்லபுனல்   - கலக்கின்றார்?
ஈ)வளர்க்கின்றார் - கலக்கின்றார்?
விடை : ஈ)வளர்க்கின்றார் - கலக்கின்றார்?

22.'காரண்மை போல வொழுகுதலும் இம்மூன்றும் ஊரன்மை யென்னுஞ் செருக்கு" அடி எதுகையை தேர்க
அ)காராண்மை - ஊராண்மை
ஆ)யென்னுஞ் - செருக்கு
இ)போல - வொழுகுதலும்
ஈ)ஊராண்மை - யென்னுஞ்
விடை : அ)காராண்மை - ஊராண்மை

23.பின்வரும் தொடரில் உள்ள இயைபைக் காண்க
'கொண்டல் கோபுரம் அண்டையிழற்கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்"
அ)கொண்டல் - அண்டை
ஆ)கூடும் - மூடும்
இ)கோபுரம் - கொடிகள்
ஈ)வானம்  - கூடும்
விடை : ஆ)கூடும் - மூடும்

24.பின்வரும தொடரில் உள்ள இயைபைக் காண்க
'ஒரு கன்னம் அறைந்தவர்க்கு மறுகன்னம் காட்டென்றும் கருவியினால் வெட்டுபவர் வெட்டுண்பர் கடியென்றும்"
அ)ஒரு கன்னம்  - வெட்டுபவர்
ஆ)கருவியினால் - அறைந்தவர்க்கு
இ)காட்டென்றும் - கடியென்றும்
ஈ)வெட்டுபவர்  - வெட்டுண்பர்
விடை : ஈ)வெட்டுபவர்  - வெட்டுண்பர்

36.வட்டம் - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)சினைப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

37.'மன்றம்" - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்

38. 'வீதி" - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)இடப்பெயர்

39.'கை" - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

40.நன்மை -பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)காலப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்




No comments:

Post a Comment