Monday, 8 August 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.சேர்த்து எழுதுக: தெற்கு + பாண்டி
அ)தெற்குப்பாண்டி
ஆ)தெற்பாண்டி
இ)தென்பாண்டி
ஈ)தெற்குப்பாண்டி
விடை : இ)தென்பாண்டி

52.ஏற்ற தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க ஜெராக்ஸ்
அ)நூலகம்
ஆ)நகலகம்
இ)அச்சகம்
ஈ)அஞ்சலகம்
விடை : ஆ)நகலகம்

53.ஏற்ற தமிழ்ச் சொல் தருக: பிரசங்கம்
அ)சொற்பொழிவு
ஆ)கூடுதல்
இ)பிதிதல்
ஈ)கலைதல்
விடை : அ)சொற்பொழிவு

54.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க 'குலவிச்சை கல்லாமல் பாகம்பாடும்"
அ)எது கல்லாமல்  பாகம்பாடும்?
ஆ)குலவிச்சை கல்லாமல பாகம்படுமா?
இ)குலவிச்சை எதனால் பாகம்படும்?
ஈ)எந்த வித்தை பாகம்படும்?
விடை : அ)எது கல்லாமல்  பாகம்பாடும்?

55.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத தேர்ந்தெடு
பட்டியல் - I   பட்டியல் - II
1.தேம்பாவணி   அ.முடியரசன்
2.இராமாயணம்  ஆ.வீரமாமுனிவர்
3.பெரியபுராணம்  இ.கம்பர்
4.பூங்கொடி     ஈ.சேக்கிழார்
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)

56.இலக்கணக் குறிப்பு தருக: பொதிர்கொள்
அ)வினைத் தொகை
ஆ)பண்புத் தொகை
இ)உவமைத் தொகை
ஈ)உருவகம்
விடை : அ)வினைத் தொகை

57.பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)கந்தன் பாடம்ட எழுதினான்
ஆ)மாடு ஒடியது
இ)கமலா பாட்டு பாடினாள்
ஈ)சினத்தை அடக்குவது நல்லது
விடை : ஈ)சினத்தை அடக்குவது நல்லது

58.சித்த மருத்துவம் என்பதே தமிழ் மருத்துவமாகும்- எவ்வகை வாக்கியம்?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)ஏவல் வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்

59.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'திருவள்ளுவரை அனைவரும் அறிவர்"
அ)திருவள்ளுவரை அறிந்தவர் யார்?
ஆ)யாரேனும் திருவள்ளுவரை அறியாதிருப்பரோ?
இ)அனைவரும் திருவள்ளுவரை அறிவாரோ?
ஈ)திருவள்ளுவரை அறயாதவர் உளரோ?
விடை : இ)அனைவரும் திருவள்ளுவரை அறிவாரோ?

60.எதிர்சொல் தேர்க: 'மன்னிப்பு"
அ)மன்னித்தல்
ஆ)வணங்குதல்
இ)வணங்கு
ஈ)தண்டிப்பு
விடை : ஈ)தண்டிப்பு




No comments:

Post a Comment