Friday, 12 August 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.அதியமான் அடக்கினான்
அ)பிறவினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)தன்வினை
விடை : ஈ)தன்வினை

52.அதியமான் அடக்கிவித்தன்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயல்பாட்டுவினை
விடை : ஆ)பிறவினை

53. ஸீன்யூஹீரா குறளோவியத்தை எழுதினார் இத்தொடருக்குரிய செயப்பாட்டு வினை வாக்கியத்தைத் தேர்க
அ)ஸீன்யூஹீரா குறளோவியத்தை எழுதுவார்
ஆ)குறளோவியம் ஸீன்யூஹீரால் எழுதப்பட்டது
இ)குறளொவியம் ஸீன்யூஹீர் எழுதப்பட்டலாம்
ஈ)குறளோவியத்தைக் ஸீன்யூஹீர் எழுதினாரா?
விடை : ஆ)குறளோவியம் ஸீன்யூஹீரால் எழுதப்பட்டது

54.சீறாப்பபுராணம் உமறுப்புலவரால் இயற்றப்பட்டது இத் தொடருக்குரிய செய்வினைத் தொடரைத் தேர்க
அ)சீறாப்புராணம் இயற்றப்பட்டது உமறுப்புலவாரால்
ஆ)சீறாப்புராணம் உமறுப்புலவரால் இயற்றப்பட்டலாம்
இ)உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்
ஈ)சீறாப்புராணம் உமறுப்புலவரால் இயற்றப்படலாம்
விடை : இ)உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்

55.குடும்ப விளக்கு - பாரதிதாசனால் இயற்றப்பட்டது இஃது எவ்வகைத் தொடர்?தேர்க
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டுவினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டுவினை

56.கீழ்காணும் சொற்களுள் பிறவினை எது?தேர்க
அ)உண்டான்
ஆ)உண்ணுவான்
இ)உண்பித்தான்
ஈ)உண்டான்
விடை : இ)உண்பித்தான்

57.'இந்த ஒவியம் என்னால் வரையப்பட்டது"- இத்தொடருக்குரிய செய்வினைத் தொடரைத் தேர்க
அ)இந்த ஒவியம் வரையப்பட்டது என்னால்
ஆ)என்னால் இந்த ஒவியம் வரையப்டலாம்
இ)வரையப்பட்டது இந்து ஒவியம் என்னால்
ஈ)நான் இந்த ஒவியத்தை வரைந்தேன்
விடை : ஈ)நான் இந்த ஒவியத்தை வரைந்தேன்

58.திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது - இஃது எவ்வகைத் தொடர் எனத் தேர்க
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டுவினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டுவினை

59. உண்டான் என்பது?
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)தன்வினை

60.காண்பித்தான் -என்பது
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டுவினை
இ)பிறவினை
ஈ)தன்வினை
விடை : இ)பிறவினை




No comments:

Post a Comment