Sunday, 14 August 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.யாவதிங்கினிச்செயல் பிரித்துதெழுதுக
அ)யாவது + இங்கு + இனி + செயல்
ஆ)யாவதிங் + இனிச்செயல்
இ)யாவதிங் + இனி + செயல்
ஈ)யாவது + இங்கு + இனிசெயல்
விடை : அ)யாவது + இங்கு + இனி + செயல்

62.ஒருவர்க்கீதுறுகண் பிரித்தெழுதுக
அ)ஒருவர்க்கு + ஈதுஉறுகண்
ஆ)ஒருவர் + உக்கு + ஈது + உறுகண்
இ)ஒருவர்க்கு + ஈது + உறுகண்
ஈ)ஒருவர்க்கு + ஈதுருகன்
விடை : இ)ஒருவர்க்கு + ஈது + உறுகண்

63.கரைமீதேறி பிரித்துதெழுதுக
அ)கரை + மீதேறி
ஆ)கரைமீது + ஏறி
இ)கரை + மீதுஏறி
ஈ)கரை + மீது + ஏறி
விடை : இ)கரை + மீதுஏறி

64.வேர்க்கோட்பலவின் பிரித்துதெழுதுக
அ)வேர்க்+ கோட் +பலவின்
ஆ)வேர் +கோட்+ பலவின்
இ)வேர்க்கோட் +பலவின்
ஈ)வேர்+ கோள் +பலவின்
விடை : ஈ)வேர் கோள் பலவின்

65.யாரஃதறிந்திசினோர் பிரித்துதெழுதுக
அ)யாரஃதறி + அஞ்சினோர்
ஆ)யார் + அஃது + அறிந்திசினோர்
இ)யார் + அஃது + அறி + எஞ்சினோர்
ஈ)யார்ஃது + அறிந்து + சினோர்
விடை : ஆ)யார் + அஃது + அறிந்திசினோர்

66.திருவவுள்ளத்திலழகு பிரித்துதெழுதுக
அ)திரு + உள்ளத்தில் + அழகு
ஆ)திருவுள்ளத் + அழகு
இ)திரு + உள்ளம் + அழகு
ஈ)திருயுள்ளம் + அழகு
விடை : அ)திரு + உள்ளத்தில் + அழகு

67.சந்திப் பிழையை நீக்குக:
அ)ஆசிரியர் மாணவனை பாராட்டினார்
ஆ)ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார்
இ)ஆசிரியர் மானவணைப பாராட்டினார்
ஈ)ஆசிரியர் மாணவன்னைப் பாராட்டினார்
விடை : ஆ)ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார்

68.சந்திப் பிழையை நீக்குக:
அ)தேடி பார்த்தான்
ஆ)எழுதிக் கொண்டான்
இ)விளையாட்டு போட்டி
ஈ)மணியை கொடுத்தான்
விடை : ஆ)எழுதிக் கொண்டான்

69.சந்திப் பிழையை நீக்குக
அ)இராமனை கண்ட குகனுக்கு பார்வை மங்கியது
ஆ)இராமனைக் கண்டக் குகனுக்குப் பார்வை மங்கியது
இ)இராமனைக் கண்டக் குகனுக்குப் பார்வை மங்கியது
ஈ)இராமனைக் கண்ட குகனுக்குப் பார்வை மங்கியது
விடை : ஈ)இராமனைக் கண்ட குகனுக்குப் பார்வை மங்கியது

70.சந்திப் பிழையை நீக்குக:
அ)அடுப்பு புகையால் விழிபுனல் கண்டது
ஆ)அடுப்புப் புகையால் விழிப் புனல் கண்டது
இ)அடுப்பு புகையால் வழிப்புனல் கண்டது
ஈ)இடுப்புப் புகையால் விழிபுனல்  கண்டது
விடை : ஆ)அடுப்புப் புகையால் விழிப் புனல் கண்டது




No comments:

Post a Comment