Tuesday, 16 August 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.அடி மோனையை குறிப்பிடு
'கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும்"
அ)கனி - சுளை
ஆ)கனி - ஏறிய
இ)சாறும் - கனி
ஈ)கனி - கழை
விடை : ஈ)கனி - கழை

62.'கல்வி கரையில கற்பவர் நாள் சில" இவ்வடியில் அமைந்துள்ள மோனையைத் எழுதுக
அ)இணை மோனை
ஆ)கூழை மோனை
இ)அடி மோனை
ஈ)முற்று மோனை
விடை : ஆ)கூழை மோனை

63.எதுகையினைக் கண்டறிக
'புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது"
அ)என்னுடல் - புல்லரிக்காது
ஆ)புகழ்நதால் - இகழ்ந்தால்
இ)என்மனம் - இறந்துவிடாது
ஈ)என் மனம் - புல்லரிக்காது
விடை : ஆ)புகழ்நதால் - இகழ்ந்தால்

64.கீழ்வரும் பாவில வரும் எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடு
'அகழ்வாரைத் தாங்ககும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை"
அ)தாங்கும் - பொறுத்தல்
ஆ)தம்மை - தாங்கும்
இ)தம்மை - தாங்கும்
ஈ)அகழ்வார் - இகழ்வார்
விடை : ஈ)அகழ்வார் - இகழ்வார்

65.கீழ்வரும் தொடரில் அமைந்த மோனைச் சொற்களைத் தேர்ந்தெடு
'கற்பனை வளர்தல் வேண்டும் கவிநயம் பிறத்தல வேண்டும்"
அ)வளர்தல் - கற்பனை
ஆ)கற்பனை - வேண்டும்
இ)கற்பனை - கவிநயம்
ஈ)கவிநயம் - பிறத்தல்
விடை : இ)கற்பனை - கவிநயம்

66.கீழ்வரும் சொற்கள் எவ்வகைத் தொடையைச் சேர்ந்தது?
இரவும் பகலும்
அ)இயைபுத் தொடடை
ஆ)முரண்தொடை
இ)மோனைத்தொடை
ஈ)எதுகைத்தொடை
விடை : ஆ)முரண்தொடை

67.'செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை"- இத்தொடரில் உள்ள மோனைச் சொற்களைத் தேர்ந்தெடு
அ)எல்லாம் - தலை
ஆ)அச்செல்வம் - எல்லாம்
இ)செல்வத்துள் -செல்வம்
ஈ)செல்வத்துள் - எல்லாம்
விடை : இ)செல்வத்துள் -செல்வம்

68.அடி இயைபு கண்டறிக
'மங்கல ஒலிகள் முழங்கின எங்கும் மாவிலைத் தோரணம் இலங்கின எங்கும்"
அ)மங்கல ஒலிகள் - எங்கும்
ஆ)மாவிலை - இலங்கின
இ)தோரணம் - மங்கல ஒலிகள்
ஈ)முழங்கின எங்கும் - இலங்கின எங்கும்
விடை : ஈ)முழங்கின எங்கும் - இலங்கின எங்கும்

69.'கையினாற் துணிந்தபோது கடலெனக் கதறி வீழ்ந்து"- மோனைச் சொற்களைக் கண்டறிக
அ)கையினாற் - கடலென
ஆ)கையினாற் துணிந்து
இ)கதறி - வீழ்ந்து
ஈ)துணிந்த - போது
விடை : இ)கதறி - வீழ்ந்து

70.முற்றெதுகை அமைந்த தொடரை காண்க
அ)துப்பார்க்குத் துப்பாய் துப்பாக்கித் துப்பார்க்கு
ஆ)சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
இ)புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
ஈ)செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
விடை : அ)துப்பார்க்குத் துப்பாய் துப்பாக்கித் துப்பார்க்கு




No comments:

Post a Comment