Thursday, 4 August 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பிரித்தெழுதுக 'அரவணை"
அ)அர + அணை
ஆ)அரவு +  அணை
இ)அரம் + அணை
ஈ)அர + வணை
விடை : ஆ)அரவு +  அணை

72.பிரித்தெழுதுக 'பைந்தமிழ்"
அ)பை + தமிழ்
ஆ)பைந் + தமிழ்
இ)பசுமை + தமிழ்
ஈ)பசு + தமிழ்
விடை : இ)பசுமை + தமிழ்

73.'சிற்றூர்" பிரித்தெழுதுக
அ)சிற்று +  ஊர்
ஆ)சிறுமை +  ஊர்
இ)சிறய +  ஊர்
ஈ)சிறு +  ஊர்
விடை : ஆ)சிறுமை +  ஊர்

74.பிரித்தெழுதுக 'அருட்டிறம்"
அ)அருள் +  திறம்
ஆ)அரு +  திறம்
இ)அருளு + அறம்
ஈ)அருட்ட + அறம்
விடை : அ)அருள் +  திறம்

75.பிரித்தெழுதுக 'வெங்கனல்"
அ)வெம் +  கனல்
ஆ)வெம்மை +  கனல்
இ)வெ +  கனல்
ஈ)வெம்மைக்கு + அனல்
விடை : ஆ)வெம்மை +  கனல்

76.'மூழ்குதல்" என்ற சொல்லின் எதிர்ச்சொல் கூறுக
அ)உவத்தல்
ஆ)சினத்தல்
இ)மிதத்தல்
ஈ)நகர்தல்
விடை : இ)மிதத்தல்

77.எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக 'புதுமை"
அ)புதியன
ஆ)பழையன
இ)புன்மை
ஈ)பழமை
விடை : ஈ)பழமை

78.பொறாமை - எதிர்ச்சொல் எழுதுக
அ)அடங்காமை
ஆ)அழுக்காறின்மை
இ)அவாவின்மை
ஈ)புறங்கூறாமை
விடை : ஆ)அழுக்காறின்மை

79.அறியாமை - எதிர்ச்சொல் எழுதுக
அ)அறிவுடமை
ஆ)முயற்சியின்மை
இ)கூடா ஒழுக்கம்
ஈ)பண்பின்மை
விடை : அ)அறிவுடமை

80.எதிர்ச்சொல்லை எடுத்தெழுது - எள்ளுதல்
அ)புகழ்தல்
ஆ)இகழ்தல்
இ)தண்டித்தல்
ஈ)சிரித்தல்
விடை : அ)புகழ்தல்




No comments:

Post a Comment