Sunday, 7 August 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.'ஆஸ்பத்திரி" - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக
அ)ஆசுபத்திரி
ஆ)மருத்துவமனை
இ)வீட்டு மனை
ஈ)விடுதி
விடை : ஆ)மருத்துவமனை

62.Liver - இவ்வாங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்?
அ)நுரையீரல்
ஆ)கல்லீரல்
இ)மண்ணீரல்
ஈ)இதயம்
விடை : ஆ)கல்லீரல்

63.'ரிஜிஸ்டர் போஸ்ட்" என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் அறிக
அ)பதிவு அஞ்சல்
ஆ)பதிவுக் கடிதம்
இ)பதிவுத் தபால்
ஈ)பதிவுக் கார்டு
விடை : அ)பதிவு அஞ்சல்

64.News paper - எனற் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எழுதுக
அ)செய்தித்தாள்
ஆ)செய்தி வெளியீடு
இ)நாள் வெளியீடு
ஈ)செய்தித் தொகுப்பு
விடை : அ)செய்தித்தாள்

65.லீவு லெட்டர் - என்ற ஆங்கிலச் சொல்லக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறிக்க
அ)லீவ் விண்ணப்பம்
ஆ)விடுமுறை லெட்டர்
இ)விடுமுறை கடிதம்
ஈ)விடுமுறை விண்ணப்பம்
விடை : ஈ)விடுமுறை விண்ணப்பம்

66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
இலை         இளை
அ)காம்பு   - கிளை
ஆ)தழை   - மெலி
இ)மெலித்ல் - இளைஞன்
ஈ)செடி     - இழை
விடை : ஆ)தழை   - மெலி

67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வால்         வாள்
அ)அம்பு    கூர்மை
ஆ)விலங்குறுப்பு கருவி
இ)கருவி    வெண்மை
ஈ)கருவி       கத்தி
விடை : ஆ)விலங்குறுப்பு கருவி

68.ஒலி வேறுபாடறிந்து சரியனா பொருளைத் தேர்க
ஊண்        ஊன்
அ)உணவு     சாதம்
ஆ)உணவு     இறைச்சி
இ)சாப்பாடு     கறி
ஈ)சாதம்       கறி
விடை : ஆ)உணவு     இறைச்சி

69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
மரம்              மறம்
அ)பறவை      அச்சு
ஆ)தாவரவகை   வீரம்
இ)காலம்      கடவுள்
ஈ)உணர்வு     பேசுதல்
விடை : ஆ)தாவரவகை   வீரம்

70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பொரி           பொறி
அ)நெல்பொரி    இயற்திரம்
ஆ)பொரித்தல்    புல்
இ)வீசு          நோய்
ஈ)வளை         ஏறு
விடை : அ)நெல்பொரி    இயற்திரம்




No comments:

Post a Comment