Saturday, 13 August 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.'இதிகாசம்"என்று போற்றப்படும் நூல்
அ)பெரியபுராணம்
ஆ)மகாபாரதம்
இ)கந்தபுராணம்
ஈ)திருவிளையாடற்புராணம்
விடை : ஆ)மகாபாரதம்

82.'சேரர் வரலாற்றுப் பெட்டகம்" என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் யாது?
அ)புறநானூறு
ஆ)பதிற்றுப்பத்து
இ)பத்துப்பாட்டு
ஈ)நாலடியார்
விடை : ஆ)பதிற்றுப்பத்து

83.'கல்வியில்லாத பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்" என்று கூறியவர்?
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)வாணிதாசன்
ஈ)முடியரசன்
விடை : ஆ)பாரதிதாசன்

84.'சிற்றில் நற்றூண் பற்றி" எனும் தொடர் இடம் பெற்றுள்ள இலக்கியம்?
அ)நெடுநல்வாடை அகநானூறு
ஆ)அகநானூறு
இ)பரிபாடல்
ஈ)புறநானூறு
விடை : ஈ)புறநானூறு

85.'வஞ்சிநெடும்பாட்டு" எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?
அ)மலைபடுகடாம்
ஆ)குறிஞ்சிப்பாட்டு
இ)மதுரைக் காஞ்சி
ஈ)பட்டினப்பாலை
விடை : ஈ)பட்டினப்பாலை

86.'நெஞ்சையள்ளும்" எனும் தொடரால் அழைக்கப்படும் இலக்கியம்?
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)வளையாபதி
ஈ)சீவகசிந்தாமணி
விடை : அ)சிலப்பதிகாரம்

87.'ஈன்ற வயிரோ இதுவே,தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே" பாடலடியகள் இடம் பெற்றுள்ள நூல்?
அ)அகநானூறு
ஆ)புறநானூறு
இ)குறுந்தொகை
ஈ)கலிங்கத்துப்பரணி
விடை : ஆ)புறநானூறு

88.'உத்தரவேதம்" என்ற அடைமொழியைப் பெறும் நூல்?
அ)ரிக் வேதம்
ஆ)யஜர் வேதம்
இ)சாம வேதம்
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்

89.ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது
அ)குறவஞ்சி
ஆ)சிலேடை
இ)பள்ளு
ஈ)குழந்தை இலக்கியம்
விடை : ஆ)சிலேடை

90.இவற்றில் இரட்டை காப்பியம் என்று அழைக்கப்படுவது
அ)சிலப்பதிகாரம்,மணிமேகலை
ஆ)சீவகசிந்தாமணி,வளையாபதி
இ)வளையாபதி,குண்டலகேசி
ஈ)மணிமேகலை,சீவகசிந்தாமணி
விடை : அ)சிலப்பதிகாரம்,மணிமேகலை




No comments:

Post a Comment