Thursday, 11 August 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)அவன் ஆஸ்தி எனக்கு வேண்டும்
ஆ)அவன் சொத்து எனக்கு வேண்டும்
இ)அவன் மனை எனக்கு வேண்டும்;
ஈ)அவன் லேண்ட்ஸ் எனக்கு வேண்டும்
விடை : ஆ)அவன் சொத்து எனக்கு வேண்டும்

2.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)அஞ்சலகம் சென்று தபால் கார்டு வாங்கிவா
ஆ)அஞ்சலகம சென்று அஞ்சலட்டை வாங்கிவா
இ)அஞ்சலகம் சென்று கடிதம் வாங்கி வா
ஈ)அஞ்சலகம் சென்று தாள் வாங்கி வா
விடை : ஆ)அஞ்சலகம சென்று அஞ்சலட்டை வாங்கிவா

3.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)நான் மத்தியானம் உன்னைச் சந்திப்பேன்
ஆ)நான் மதியம் என்னைச சந்திப்பேன்
இ)நான் நடுப்பகல் உன்னைச் சந்திப்பேன்
ஈ)நான் நண்பகல் உன்னைச் சந்திப்பேன்
விடை : ஈ)நான் நண்பகல் உன்னைச் சந்திப்பேன்

4.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)பகவானோட கிருபை கிடைக்கும்
ஆ)இறைவன் திருவருள் கிடைக்கும்
இ)பகவான் ஒளி கிடைக்கும்
ஈ)முன்னோன் அன்பு கிடைக்கும்
விடை : ஆ)இறைவன் திருவருள் கிடைக்கும்

5.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)எனது பள்ளியில் ஹாஸ்டல் வசதி உண்டு
ஆ)எனது பள்ளியில் விடுதி வசதி உண்டு
இ)எனது பள்ளியில் காஸ்பிடல் வசதி உண்டு
ஈ)எனது பள்ளியில் கேண்டீன் வசதி உண்டு
விடை : ஆ)எனது பள்ளியில் விடுதி வசதி உண்டு

6.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)நாஷ்டா சாப்பிட்டான்
ஆ)நாஷ்டா அருந்தினான்
இ)சிற்றுண்டு உண்டான்
ஈ)சிற்றுண்டி அருந்தினாhன்
விடை : ஈ)சிற்றுண்டி அருந்தினாhன்

7.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)தோட்டத்தில் புஷ்பங்கள் உள்ளன
ஆ)மலர்த் தோட்டத்தல் மலர்கள் உள்ளன
இ)கார்டனில் காய்கள் உள்ளன
ஈ)கார்டனில் பூக்கள் உள்ளன
விடை : ஆ)மலர்த் தோட்டத்தல் மலர்கள் உள்ளன

8.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)குடிப்பதற்கு காபி கொண்டு வா
ஆ)குடிப்பதற்கு ஜலம் கொண்டு வா
இ)குடிப்பதற்கு டீ கொண்டு வா
ஈ)குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வா
விடை : ஈ)குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வா

9.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)விஞ்ஞானம் வளர்ந்துள்ளது
ஆ)அறிவியல் வளர்ந்துள்ளது
இ)விந்நானம் வளர்ந்துள்ளது
ஈ)விஞ்ஞாலம் வளர்ந்துள்ளது
விடை : ஆ)அறிவியல் வளர்ந்துள்ளது

10.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)வானத்தில் பசு பறந்தது
ஆ)வானத்தில பறவை பறந்தது
இ)வானத்தில பட்சி பறந்தது
ஈ)வானத்தில பருந்து பறந்தது
விடை : ஆ)வானத்தில பறவை பறந்தது



No comments:

Post a Comment