Thursday, 4 August 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிக 'Hostel"
அ)சத்திரம்
ஆ)தங்கும் மனை
இ)தங்கும் விடுதி
ஈ)தங்கும் பள்ளி
விடை : இ)தங்கும் விடுதி

12.'Manager" எனபதன் சரியான தமிழ்ச் சொல்
அ)மேலாளர்
ஆ)மேற்பார்வையாளர்
இ)தலைவர்
ஈ)வேலை வாங்குபவர்
விடை : அ)மேலாளர்

13.'பிரிஃப்கேஸ்" (Briefcase) - இச்சொல்லிற்கு சரியனா தமிழ்ச் சொல தருக
அ)கைப்பெட்டி
ஆ)தூக்குப்பெட்டி
இ)குறும்பெட்டி
ஈ)குணிப்பெட்டி
விடை : அ)கைப்பெட்டி

14.'கோர்ட்" (Court) - இணையான தமிழ்ச் சொல்லை எடுத்தெழுதுக
அ)உயர்நீதிமன்றம்
ஆ)வழக்கு மன்றம்
இ)வழக்கறிஞர் கூடுமிடம்
ஈ)நீதிமன்றம்
விடை : ஈ)நீதிமன்றம்

15.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் கூறுக. Taluk Office
அ)தாலுகா ஆபிசு
ஆ)தாலுகா அலுவல்
இ)தாலுகா இடம்
ஈ)வட்டாட்சியர் அலுவலகம்
விடை : ஈ)வட்டாட்சியர் அலுவலகம்

16.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
உரை     - உறை
அ)சொல்    - மூடி
ஆ)செயல்   - தலையணை
இ)உரசுதல்  - உராய்தல்
ஈ)காண்     - பார்
விடை : அ)சொல்    - மூடி

17.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
இரை        - இறை
அ)தேடுதல்    - பாடுதல்
ஆ)தீனி      - கடவுள்
இ)சாதம்     - தள்ளுதல்
ஈ)அறிதல்    - உண்ளுதல்
விடை : ஆ)தீனி      - கடவுள்

18.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
அரம்       - அறம்
அ)வாள்    - செயல்
ஆ)ஒரு கருவியது - நல்லது
இ)ஒரு கருவி - தருமம்
ஈ)அறுத்தல்   - அரைதல்
விடை : இ)ஒரு கருவி - தருமம்

19.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஆர       -அற
அ)நிறைய  - தணிய
ஆ)நிறைந்தல்  - தணிய
இ)நிறுத்தல்   - கூறுதல்
ஈ)நீக்கம்     - தணிக்கை
விடை : அ)நிறைய  - தணிய

20.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
உலை         - உளை
அ)உழைத்தல்  - உளை
ஆ)சோறு     - உள்ளம்
இ)சொல்லன் உலை - பிடரி மயிர்
ஈ)கேடு - அலைசல்
விடை : இ)சொல்லன் உலை - பிடரி மயிர்



No comments:

Post a Comment