Tuesday, 9 August 2016

20. TNPSC பொதுத்தமிழ்


TNPSC பொதுத்தமிழ்
1.'நகமும் சதையும் போல" - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)பிரிக்க முடியாதது
ஆ)பிரிக்க முடியும்
இ)சிறப்பு
ஈ)புகழ்
விடை : அ)பிரிக்க முடியாதது

2.சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல" -- உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)சிறப்பின்மை
ஆ)வெறுமை
இ)குளிர்;ச்சி
ஈ)சிறப்பு
விடை : ஈ)சிறப்பு

3.'தூண்டிலிற்பட்ட மீனைப்போல" -- உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)இன்பம்
ஆ)துன்பம்
இ)வெற்றி
ஈ)புகழ்
விடை : ஆ)துன்பம்

4.'வற்றிய குளத்தைப் பறவை விட்டுவிடுவது போல" - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)கைவிடுதல்
ஆ)ஊக்கமளித்தல்
இ)ஆக்கமளித்தல்
ஈ)இன்பமூட்டுதல்
விடை : அ)கைவிடுதல்

5.'மழை காணாப் பயிர் போல" - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)மகிழ்ச்சி
ஆ)இகழ்ச்சி
இ)வறுமை
ஈ)வாட்டம்
விடை : ஈ)வாட்டம்

6.எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன் மற்றன்ன செய்யாமை நன்று - அடி எதுகையைச் சுட்டுக
அ)எற்றென் - செய்யற்க
ஆ)மற்றன்ன - செய்யாமை
இ)எற்றென் - செய்வானேன்
ஈ)எற்றென் - மற்றன்ன
விடை : ஈ)எற்றென் - மற்றன்ன

7.ஆற்றல் தரும் அணுபிளந்தல் - அந்த ஆற்றலினாற் பேரணடங்கள் யாவும் - அடி மோனையைச் சுட்டுக
அ)ஆற்றல்தரும் - அந்த
ஆ)ஆற்றலினாற் - பேரண்டங்கள்
இ)ஆற்றல்தரும் - ஆற்றலினாற்
ஈ)ஆற்றலினாற் - யாவும்
விடை : இ)ஆற்றல்தரும் - ஆற்றலினாற்

8.நிலத்துக் கணியென்ப நெல்லும் கரும்பும் - இயைபுத் தொடையினை சுட்டுக
அ)நிழலத்துக் - கணியென்ப
ஆ)நிலத்துக் - நெல்லும்
இ)கணியென்ப - கரும்பும்
ஈ)நெல்லும்  - கரும்பும்
விடை : ஈ)நெல்லும்  - கரும்பும்

9.அறிவை விரிவுசெய் அகண்ட மாக்கு - சீர் மோனையைக் கண்டறிக
அ)அறிவை  - வரிவு செய்
ஆ)அகண்ட - மாக்கு
இ)வரிவு செய் - அகண்ட
ஈ)அறிவை   - அகண்ட
விடை : ஈ)அறிவை   - அகண்ட

10.மேவுகுறு முனிக்கும்
அச்சம் செனிக்கும் - இயைபுத் தொடையினை சுட்டுக
அ)மேவுகுறு - முனிக்கும்
ஆ)அச்சம்  - செனிக்கும்
இ)முனிக்கும் - செனிக்கும்
ஈ)மேவுகுறு  - அச்சம்
விடை : இ)முனிக்கும் - செனிக்கும்




No comments:

Post a Comment