Wednesday, 10 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
01.இன்சொல் - எதிர்ச்சொல் தருக
அ)நல்ல சொல்
ஆ)செஞ்சொல்
இ)வன்சொல்
ஈ)மென்சொல்
விடை : இ)வன்சொல்

02.ஒய்வு என்ற சொல்லின் சரியான எதிர்ச்சொல்
அ)உறக்கம்
ஆ)உழைப்பு
இ)களைப்பு
ஈ)சோர்வு
விடை : ஆ)உழைப்பு

03.எதிர்ச்சொல் எழுதுக - வாய்மை
அ)தூய்மை
ஆ)உண்மை
இ)மெய்மை
ஈ)பொய்மை
விடை : ஈ)பொய்மை

04.சரியான எதிர்ச்சொல்லை தேர்வு செய்க - அமைதி
அ)குழப்பம்
ஆ)தயக்கம்
இ)குளப்பம்
ஈ)குலப்பம்
விடை : அ)குழப்பம்

05.எதிர்ச்சொல் கண்டு வட்டமிடுக - நோதல்
அ)வாடுதல்
ஆ)தணிதல்
இ)வருத்தல்
ஈ)அழுதல்
விடை : ஆ)தணிதல்

06.பின்வரும் சொற்களுக்கு எதிர்சொல் எழுதுக-பிறத்தல்
அ)சாதல்
ஆ)இறத்தல்
இ)பிறத்தல்
ஈ)இறப்பு
விடை : ஆ)இறத்தல்

07.ஆண்மை என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக
அ)அலி
ஆ)ஆண்
இ)பெண்மை
ஈ)கீழ்மை
விடை : இ)பெண்மை

08.எதிர்ச்சொல்லைத் தேர்வு செய் - இயற்கை
அ)உண்டாக்குதல்
ஆ)இயக்கும் கை
இ)செயற்கை
ஈ)அழித்தல்
விடை : இ)செயற்கை

09.சிறுமை இதன் எதிர்ச்சொல்
அ)பெரிய
ஆ)சின்ன
இ)பெருமை
ஈ)சிறிய
விடை : இ)பெருமை

10.இரத்தல் என்பதன் நேரான எதிர்ச்சொல் தருக
அ)காத்தல்
ஆ)அழித்தல்
இ)ஈதல்
ஈ)இரவாமை
விடை : இ)ஈதல்




No comments:

Post a Comment