Tuesday, 16 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் ---- தலை
அ)பொறுத்தல்
ஆ)மறத்தல்
இ)இரத்தல்
ஈ)சிறத்தல்
விடை : அ)பொறுத்தல்

32.பொறுத்தல் இறப்பினை என்னும் அதனை என்ற குறளின் அடுத்த அடியானது
அ)வன்மை மடவார்ப் பொறை
ஆ)மறத்தல் அதனினும் நன்று
இ)போற்றி ஒழுகப் படும்
ஈ)பொன்னும் துணையும் புகழ்
விடை : ஆ)மறத்தல் அதனினும் நன்று

33.செருக்கினால் தீமை செய்தாரை எதன் மூலம் அவரை வெற்றி கொள்ள வேண்டுமென குறள் கூறுகிறது?
அ)வீரம்
ஆ)அறிவு
இ)மன்னிப்பு
ஈ)பொறுமை
விடை : ஈ)பொறுமை

34.பற்றற்ற துறவியரினும் மேலானவர் என யாரை திருவள்ளுவர் கூறுகிளார்?
அ)ஆன்மீகம் பேசி மக்களின் புகழைப் பெற்றவர்
ஆ)வேதம் ஒதி பூசை செய்து வழிபடுபவர்
இ)கல்வி பல கற்றறிந்தவர்
ஈ)வரம்பு கடந்து பேசுவோரின் தீய சொற்களையும் பொறுத்துக் கொள்பவர்
விடை : ஈ)வரம்பு கடந்து பேசுவோரின் தீய சொற்களையும் பொறுத்துக் கொள்பவர்

35.உண்ணாநோன்பு இருக்கும் பெரியவர்களை விடத் தம்மை இகழ்வோரின் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவரே
அ)தாழ்நதவர்
ஆ)கற்றவர்
இ)வலியுடையவர்
ஈ)மேலானவர்
விடை : ஈ)மேலானவர்

36.செவியுணர்வின்---- உடையார் அவியுணர்வின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து
அ)அறிவு
ஆ)கல்வி
இ)கேள்வி
ஈ)செல்வம்
விடை : இ)கேள்வி

37.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ------ உடையார்வாய்ச் சொல்
அ)பண்பு
ஆ)ஒழுக்கம்
இ)கல்வி
ஈ)மேன்மை
விடை : ஆ)ஒழுக்கம்

38.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் என்ற குறளின் அடுத்த அடியானது
அ)தீண்டிய கேள்வி யவர்
ஆ)தோட்கப் படாத செவி
இ)வாயின் ராதல் அரிது
ஈ)அவியினும் வாழினும் என்
விடை : ஆ)தோட்கப் படாத செவி

39.நுட்பாமாகிய கேள்வியறிவு இல்லாதவர்
அ)கேள்வியால் துளைக்கப்படாத செவியுடையவர்
ஆ)நல்லொழுக்ககம் உடையவர்
இ)தேவர்களுக்கு ஒப்பாவர்
ஈ)பணிவான சொற்களைப் பேசுவதில்லை
விடை : ஈ)பணிவான சொற்களைப் பேசுவதில்லை

40.எந்த மக்கள் இறந்தாலும் என்ன?
வாழ்ந்தாலும் என்ன? என வள்ளுவர் றுகிறார்?
அ)கேள்வியின் வாயிலாகச் செவிச்சுவை உணராதவர்
ஆ)உணவின் வாயிலாக வாய்ச்சுவை மட்டும் உணருவர்
இ)ஆய்ந்தறிந்த கேள்வி அறிவுடையயோர்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ



No comments:

Post a Comment