Friday, 12 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.தாய் தாலாட்டுப் பாடினாள் - இது எவ்வகை வாக்கியம்?
அ)தன் வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன் வினை

2.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை இவற்றுள் சரியானதைத் தேர்க- அரசன் கோவிலைக் கட்டினான்
அ)பிறவினை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செயப்பாட்டு வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : ஈ)தன்வினை வாக்கியம்

3.தன்வினை,பிறவினை,செயப்பாட்டு வினை,செய்வினை வாக்கியங்களைக் கண்டறிதல்.
அவன் கற்பித்தான்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஈ)பிறவினை

4.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டறிக
இலக்கணம் கற்பித்தேன்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை

5.பிறவினை என்பது
அ)அடங்கினான்
ஆ)அடங்குவான்
இ)அடக்கினான்
ஈ)அடங்குவான்
விடை : இ)அடக்கினான்

6.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக- கல்வியைக் கற்பிப்பவர் ஆசிரியர்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை

7.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக- கிளியை பேசப் பழக்கினாள்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை

8.ஆசிரியர் பயிற்றுவித்தார் - இது எவ்வகை வாக்கியம்
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)பிறவினை

9.எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுதுக
தாய் குழந்தைக்கு உணவை ஊட்டினாள்
அ)கட்டளை வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)பிற வினை வாக்கியம்
ஈ)தன்வினை வாக்கியம்
விடை : இ)பிற வினை வாக்கியம்

10.எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுது
திவள்ளுவர்,ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஒம்ப வேண்டும் என்று கூறியுள்ளார்
அ)தனி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : ஆ)கலவை வாக்கியம்




No comments:

Post a Comment