Wednesday, 3 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு. 'குன்றின் மேலிட்ட விளக்கென"
அ)உயரமாகத் தெரிகிறது
ஆ)பாதுகாப்பாக இருக்டகிறது
இ)வெளிச்சமாகத தெரிகிறது
ஈ)தெளிவாகத் தெரிகிறது
விடை : ஈ)தெளிவாகத் தெரிகிறது

92.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத தேர்ந்தெடு 'நாய் பெற்ற தெங்கம் பழம்"
அ)தான் மட்டும் அனுபவிக்கத் தெரியாதவன்
ஆ)தானும் பிறரும் அனுபவிக்கத் தெரியாதவன்
இ)பிறருக்கும் கொடுப்பவன்
ஈ)தனக்கும் பிறருக்கும் பயன்படுத்தத் தெரிந்தவன்
விடை : ஆ)தானும் பிறரும் அனுபவிக்கத் தெரியாதவன்

93.'இஞ்சி தின்ற குரங்கு போல" உவமை விளக்கம் பொருள்
அ)தவிப்பு
ஆ)தாகம்
இ)மருட்சி
ஈ)பயனின்மை
விடை : அ)தவிப்பு

94.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான
பொருமைத் தேர்ந்து எழுதுக 'பசுமரத்தாணி"
அ)மனதில் பதிதல்
ஆ)மனதில் இருத்தல்
இ)நினைத்தல்
ஈ)ஊன்றுதல்
விடை : அ)மனதில் பதிதல்

95.கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயன் இவ்வடியிலுள்ள மோனை
அ)இணை மோனை
ஆ)கூழை மோனை
இ)பொழிப்பு மோனை
ஈ)ஒரூஉ மோனை
விடை : ஆ)கூழை மோனை

96.இயைபுத் தொடை காண்க 'செந்தமிழே!உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
அ)செந்தமிழே - செயலினை
ஆ)உயிரே - மூச்சினை
இ)நறுந்தேனே - உனக்கிளத்தேனே!
ஈ)செயலினை - உனக்களித்தேனே?
விடை : இ)நறுந்தேனே - உனக்கிளத்தேனே!

97.இயைபுத் தொடை காண்க 'வாழிய தேவபிராண் எங்கும நிறைந்த பிரான்"
அ)வாழியஎங்கும்
ஆ)நிறைந்த - தேவ
இ)எங்கும் - பிரான்
ஈ)தேவபிரான் - நிறைந்தபிரான்
விடை : ஈ)தேவபிரான் - நிறைந்தபிரான்

98.அடி எதுகை காண்க
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து"
அ)ஒறுத்தாரை - ஒன்றாக
ஆ)பொருத்தாரைப் - பொன்போற்
இ)ஒறுத்தாரை - பொறுத்தாரைப்
ஈ)பொறுத்தாரைப் - பொதிந்து
விடை : இ)ஒறுத்தாரை - பொறுத்தாரைப்

99.முற்றெதுகை அமைந்த தொடரைச் சுட்டுக
அ)துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
ஆ)சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
இ)புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
ஈ)செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
விடை : அ)துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு

100.கீழ்கண்டவற்றுள் எதுகை நயமுடைய சொற்றொடர் எது?
அ)வேலன் கலைகளைப் பலருக்குக் கற்பித்தான்
ஆ)வேலன் ஒருவருக்குக் கலைகளைக் கற்பித்தான்
இ)ஒருவருக்குக் கலைகளை வேலன் கற்பித்தான்
ஈ)வேலன் பலருக்கு நன்கு கற்பித்தான்
விடை : அ)வேலன் கலைகளைப் பலருக்குக் கற்பித்தான்




No comments:

Post a Comment