Friday, 5 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.அகர வரிசைப்படி உள்ள விடை தேர்க
அ)காடு,கிணறு,குரவை,கூகை
ஆ)கிணறு,குரவை,குரவை,கூகை
இ)குரவை,கூகை,காடு,கிணறு
ஈ)கூகை,காடு,கிணறு,குரவை
விடை : அ)காடு,கிணறு,குரவை,கூகை

12.முறையான சொற்றொடர் தேர்க
அ)நாலும் இரண்டும சொல்லுக்கு உறுதி
ஆ)உறுதி சொல்லுக்கு நாலும் இரண்டும்
இ)இரண்டும் நாலும் சொல்லுக்கு உறுதி
ஈ)சொல்லுக்கு உறுதி இரண்டும் நான்கும்
விடை : அ)நாலும் இரண்டும சொல்லுக்கு உறுதி

13.'மொழித்தேன்" - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)உருவகம்
ஆ)உவமைத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)அன்மொழிததொகை
விடை : அ)உருவகம்

14.'வாய்ப்பவளம்" - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)உவமைத்தொகை
ஆ)உருவகம்
இ)உம்மைத்தொகை
ஈ)எண்ணும்மை
விடை : ஆ)உருவகம்

15.'அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை" - இத்தொடரில் எதுகை அமைந்த சொற்கள்
அ)அறன்கடை,பிறன்கடை
ஆ)நன்றார்,பிறன்கடை
இ)அறன்கடை,நின்றார்
ஈ)எல்லாம்,நின்றார்.
விடை : அ)அறன்கடை,பிறன்கடை

16.'மரம் போல்வர்" உவமைக்கேற்ற பொருள் தேர்க
அ)அன்பு இல்லாதவர்
ஆ)மக்கட் பண்பு இல்லாதவர்
இ)கல்லாதவர்
ஈ)நன் மக்கட்பேறு இல்லாவர்
விடை : ஆ)மக்கட் பண்பு இல்லாதவர்

17.'உடுக்கை இழந்தவன் கை போல் - உவமைக்கேற்ற பொருள் தேர்க
அ)எல்லார்க்கம உதவுபவன்
ஆ)தனக்கு மட்டுமே உதவுபவன்
இ)நட்புக்கு உதவுபவன்
ஈ)தன் குடும்பத்திற்கு உதவுபவன்
விடை : இ)நட்புக்கு உதவுபவன்

18. தாய் உணவு உண்டாள் - இது எவ்வகை வினை?
அ)தன்வினை
ஆ)பறிவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை

19. போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது - எவ்வகை வாக்கியம்?
அ)எதிர்மறை
ஆ)உடன்பாடு
இ)உணர்ச்சி
ஈ)செய்தி
விடை : அ)எதிர்மறை

20.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் - எவ்வகை வாக்கியம்?
அ)உடன்பாடு
ஆ)எதிர்மறை
இ)செய்தி
ஈ)கட்டளை
விடை : அ)உடன்பாடு




No comments:

Post a Comment