Tuesday, 9 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'பொதும்பர்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)முதற் போலி
ஆ)இடைப்போலி
இ)வினையாலணையும் பெயர்
ஈ)ஈற்றுப்போலி
விடை : இ)வினையாலணையும் பெயர்

22.'எடுப்பதூஉம்"- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)சொல்லிசை அளபெடை
ஆ)இன்னிசை அளபெடை
இ)ஒற்றளபெடை
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)இன்னிசை அளபெடை

23.'சொல்லும் செயலாலும்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)முற்றும்மை
ஆ)எண்ணும்மை
இ)உம்மைத்தொகை
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)எண்ணும்மை

24.'தொல்லுலகம்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)பண்புத்தொகை
ஆ)பண்புப்பெயர்
இ)வினைத்தொகை
ஈ)பெயர்ச்சொல்
விடை : அ)பண்புத்தொகை

25.'மாநெறி" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)உரிச்சொல்
ஆ)பண்புத்தொகை
இ)விளைச் சொல்
ஈ)மரூஉமொழழி
விடை : அ)உரிச்சொல்

26.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'மனிதப் பிறப்பு உயர்ந்தது"
அ)மனிதப் பிறப்பு ஏன் உயாந்தது?
ஆ)மனிதப் பிறப்பு எப்படிப்பட்டது?
இ)உயாந்ததாக மனிதப் பிறப்பு மதிப்பிடக் காரணம் என்ன?
ஈ)மனிதப் பிறப்பு மிக உயர்ந்ததா?
விடை : ஆ)மனிதப் பிறப்பு எப்படிப்பட்டது?

27.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'மக்கள் போற்றும் தலைவாராக காமராசர் விளங்கினார்!"
அ)மக்கள் போற்றும் தலைவர் யார்?
ஆ)காமராசர் எவ்வாறு விளங்கினார்?
இ)மக்கள் போற்றும் தலைவாராக விளங்கியவர் யார்?
ஈ)காமராசரை மக்கள் எவ்வாறு போற்றினர்?
விடை : ஆ)காமராசர் எவ்வாறு விளங்கினார்?

28.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது?
அ)முருங்கைக் கீரையில் எது .மிகுதியாக உள்ளது?
ஆ)இரும்பச்சத்து முருங்கைக கீரையில் மிகுதியாக உள்ளது?
இ)முருங்கைக் கீரையில் உள்ள சத்து எது?
ஈ)முருங்கைக் கிரை உடலுக்கு நல்லதா?
விடை : இ)முருங்கைக் கீரையில் உள்ள சத்து எது?

29.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு இலக்கியங்களைக் காலக் கண்ணடி என்பர்"
அ)காலக் கண்ணாடி என்பது எது?
ஆ)இலக்கியம் என்பது என்ன?
இ)இலக்கியங்கள் காலக் கண்ணாடியா?
ஈ)எவற்றைக் காலக்காண்ணாடி என்பர்?
விடை : ஈ)எவற்றைக் காலக்காண்ணாடி என்பர்?

30.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'பண்பாட்டில் சிறந்தது தமிழ்நாடு"
அ)தமிழ்நாட்டின் சிறப்பு எது ?
ஆ)பண்பாட்டில் சிறந்தது எது?
இ)தமிழ்நாட்டின் பண்பாடு எது?
ஈ)தமிழ்நாடு பண்பாட்டில் சிறந்ததா?
விடை : ஆ)பண்பாட்டில் சிறந்தது எது?




No comments:

Post a Comment