Monday, 1 August 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.'மகிழ்" இதன் வினைமுற்று
அ)மகிழு
ஆ)உவந்து
இ)மகிழ்ந்தான்
ஈ)மகிழ்தல்
விடை : இ)மகிழ்ந்தான்
62.'புகு" என்ற வேர்ச்சொல்லின் விளையாலணையும் பெயரைக் காண்க
அ)புக்கு
ஆ)புகுத்தி
இ)புகுந்தவன்
ஈ)புகார்
விடை : இ)புகுந்தவன்
63.'படி" என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று:
அ)படித்தான்
ஆ)பட்டான்
இ)கெடுத்தான்
ஈ)பட்ட
விடை : அ)படித்தான்
64.'அணை" என்னும் வேர்ச்சொல்லை உடைய வினையெச்சம் காண்க
அ)அணைத்தான்
ஆ)அணைத்து
இ)அணைத்த
ஈ)அணைத்தாள்
விடை : ஆ)அணைத்து
65.பெயர்ச்சொல்லின் வகை அறிக : 'தாள்"
அ)காலப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)பொரட்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
66.பெயர்சொல்லின் வகை அறிக: 'ஆடி"
அ)பண்புப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்
67.செல் - என்பதன் வினையெச்சம்
அ)சென்றான்
ஆ)சென்ற
இ)சென்று
ஈ)சென்றாள்
விடை : இ)சென்று
68.'படி" என்னும்வேர்ச்சொல்லை உடைய வினையெச்சம் காண்க
அ)படித்து
ஆ)படித்தவன்
இ)படித்த
ஈ)படித்தாள்
விடை : அ)படித்து
69.'படை" என்னும் வேர்ச்சொல்லிற்குரிய வினையாலணையும் பெயர்
அ)படைத்து
ஆ)படைத்தான்
இ)படைத்தவன்
ஈ)படைத்த
விடை : இ)படைத்தவன்
70.'அறி" என்னம் வேர்ச்சொல்லிற்குரிய வினையாலணையும் பெயர்
அ)அறிந்து
ஆ)அறந்த
இ)அறிந்தான்
ஈ)அறிந்தவன்
விடை : ஈ)அறிந்தவன்



No comments:

Post a Comment