Wednesday, 17 August 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.இவற்றில் நாட்டியத்திற்கும் நாடகத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ள இலக்கண நூல்
அ)முறுவல்,சயந்தம் ,செயிற்றியமம்
ஆ)மதிவாணர் நாடகத்தமிழ் நூல்
இ)விளக்கத்தார் த்து,குணநூல் த்து நூல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

42.சிலப்பதிகாரம் இவற்றில் எதனைப்பற்றி கூறவில்லை
அ)நாடகக்கலை
ஆ)காட்சித்திரை
இ)நாடக பள்ளி
ஈ)நாடக அரங்கின் அமைப்பு
விடை : இ)நாடக பள்ளி

43.இவற்றில் பொருந்தமான இணை எது?
அ)பரிதிமாற்கலைஞர் - நாடகவியல்
ஆ)சுவாமி விபுலானந்தர் - மதங்க சூளாமணி
இ)பம்மல் சம்பந்தனார் - மத்தவிலாசம்
ஈ)மறைமலையடிகள் - சாகுந்தலம்
விடை : இ)பம்மல் சம்பந்தனார் - மத்தவிலாசம்

44.இவர்களில் நாடகப் பேராசிரியர் என அழைக்கப்படுபவர்
அ)பரிதிமாற்கலைஞர்
ஆ)சுவாமி விபுலானந்தர்
இ)பம்மல் சம்பந்தனார்
ஈ)மறைமலையடிகள்
விடை : இ)பம்மல் சம்பந்தனார்

45.தொழில்முறை நாடக அரங்குகளைப் பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியவர்
அ)பம்மல் சம்பந்தனார்
ஆ)சுவாமி விபுலானந்தர்
இ)பரிதிமாற்கலைஞர்
ஈ)மறைமலையடிகள்
விடை : அ)பம்மல் சம்பந்தனார்

46.இவற்றில் தவறான கூற்று எது?
அ)மகேந்திரவர்மன் - மத்தவிலாசம்
ஆ)இராசராசசோழன் - இராசராசேச்சுவர நாடகம்
இ)மராத்திய மன்னர்கள் - கோவில் நாடகங்கள்
ஈ)பல்லவ மன்னர்கள் - நாடக அரங்குகள்
விடை : ஈ)பல்லவ மன்னர்கள் - நாடக அரங்குகள்

47.உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடக வகை
அ)பள்ளு நாடகம்
ஆ)குறவஞ்சி நாடகம்
இ)கோவில் நாடகம்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : அ)பள்ளு நாடகம்

48.நொண்டி நாடகங்கள் என்பது
அ)செல்வக்குடியில் பிறந்த ஒருவன் ஒழுக்கங்கெட்டுப் போவது
ஆ)நொயும் வறுமையும் உள்ளாவது
இ)இறுதியில் திருந்தி வாழ்வது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

49.இவற்றில் பொருந்தாத இணை எது?
அ)அருணாச்சலக் கவிராயர் - இராமநாடகம்
ஆ)காசிவிசுவநாதர் - நந்தனார் சரித்திரம்
இ)பேசராசிரியர் சுந்தரனார் - மனோன் மணியம்
ஈ)சங்கரதாசு சுவாமிகள் - பிரகலாதன்
விடை : ஆ)காசிவிசுவநாதர் - நந்தனார் சரித்திரம்

50.டம்பாச்சாரி விலாசம் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
அ)கோபாலகிருட்டிண பாரதி
ஆ)காசி விசுவநாதர்
இ)பேராசிரியர் சுந்தரனார்
ஈ)சங்கரதாசு சுவாமிகள்
விடை : ஆ)காசி விசுவநாதர் 



No comments:

Post a Comment