Wednesday, 17 August 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.இவற்றில் பொருத்தமற்ற கூற்று எது?
அ)மனோன்மணியத்தை பேராசிரியர் சுந்தரனார் எழுதினார்
ஆ)மனோன்மணியம் இசை நாடகக் காப்பியம்
இ)லார்ட் லிட்டன் எழுதிய மறைவழியின் தழுவல் மனோன்மணியம்
ஈ)1891- இல் வெளியிடப்பட்டது
விடை : ஆ)மனோன்மணியம் இசை நாடகக் காப்பியம்

52.இவற்றில் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகனம் எது?
அ)தேசியக்கொடி
ஆ)தேசியப் பாடல்
இ)கதரின் வெற்றி
ஈ)தேசபக்தி
விடை : இ)கதரின் வெற்றி

53.சங்கரதாசு சுவாமிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறார்
அ)நாடக உலகின் இமயமலை
ஆ)தமிழ்நாடகத் தலைமையாசிரியர்
இ)தமிழ்நாடகத் தந்தை
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

54.இவற்றில் சங்கரதாசு சுவாமிகள் எழுதாத நாடகம் எது?
அ)கதரின் வெற்றி
ஆ)இலவகுசா
இ)பவளக்கொடி
ஈ)அபிமன்யுசுந்தரி
விடை : அ)கதரின் வெற்றி

55.பம்மல் சம்பந்தனார் பற்றிய தவறான கூற்று எது?
அ)தமிழ் நாடகத் தந்தை என போற்றப் படுகிறார்
ஆ)ஷேக்ஸ்பியாரின் ஆங்கில நாடகங்களை மொழிபெயர்த்தார்
இ)நாடகமேடை நினைவுகள் நூலை எழுதினார்
ஈ)நாடகங்களை தயாரிப்பது எப்படி?என்று நூலை எழுதினார்
விடை : ஈ)நாடகங்களை தயாரிப்பது எப்படி?என்று நூலை எழுதினார்

56.இவற்றில் எந்த நாடகம் எழுபது ஆண்டுகளாகத் தமிழ் நாடகமேடையில் புகழ்பெற்ற விளங்கியது?
அ)சிறுத்தொண்டர்
ஆ)அபிமன்யு சுந்தரி
இ)மனோகரன்
ஈ)பவளக்கொடி
விடை : இ)மனோகரன்

57.மனோகரன் நாடகத்தை எழுதியவர் யார்?
அ)அறிஞர் அண்ணா
ஆ)மு.கருணாநிதி
இ)சங்கரதாசு சுவாமிகள்
ஈ)பம்மல் சம்பந்தனார்
விடை : ஈ)பம்மல் சம்பந்தனார்

58.தி.க.சண்முகனார் பற்றிய தவறான கூற்று எது?
அ)ஒளவையாராக நடித்தார்
ஆ)சென்னையில் ஒளவையார் நாடகம் அரங்கேறியது
இ)ஒளவை சண்முகனார் என அழைக்கப் படுகிறார்
ஈ)சிறந்த முறையில் நடித்தார்
விடை : ஆ)சென்னையில் ஒளவையார் நாடகம் அரங்கேறியது

59.நாடகம் வாயிலாக புலப்படுத்த வேண்டியவை
அ)கலை என்பது ஆக்கவழியில் செலுத்தல் வேண்டும்
ஆ)கலைஞன் ஆக்கத்திற்காகவே வாழ்கிறான்
இ)மறுமலர்ச்சி கருத்துகளை பரப்ப வேண்டும்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

60.நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து என பாடியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கவிமணி தேசிக விநாயகனார்
ஈ)நாமக்கல் இராமலிங்கனார்
விடை : இ)கவிமணி தேசிக விநாயகனார்




No comments:

Post a Comment