Wednesday, 3 August 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.விடைக்கேற்ற வினாக்களைகத் தெர்ந்தெடு
நல்லறிவுடைய மக்களை விளைவிக்கப் பெண் கல்வி தேவை"
அ)பெண்களுக்கு நல்லறிவ தேவையா?
ஆ)பெண் கல்வி ஏன் தேவை?
இ)நல்லறிவுடையவர்களுக்குப் பெண் கல்வி தேவையா?
ஈ)மக்களை விளைவிக்கப் பெண் கல்வி ஏன் தேவை?
விடை : ஆ)பெண் கல்வி ஏன் தேவை?

112.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு 'சொல்லும் செயலும் நன்றாக இருக்க வேண்டும்"
அ)எவை நன்றாக இருக்க வேண்டும்?
ஆ)செயல் நன்றாக இருக்க வேண்டும்?
இ)சொல்லும் செயலும் ஏன் இருக்க வேண்டும்?
ஈ)எப்படி செயல் நன்றாக இருக்க வேண்டும்?
விடை : அ)எவை நன்றாக இருக்க வேண்டும்?

113.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு 'வரலாற்று சின்னங்கள் பழமை வாய்ந்தன"
அ)எச்சின்னங்கள் பழமை வாய்ந்தன?
ஆ)சின்னங்கள் பழமை வாய்ற்தனவா?
இ)பழமை வாய்ந்த சின்னங்களா?
ஈ)சின்னங்கள் எப்படி பழமை வாய்ந்தன?
விடை : அ)எச்சின்னங்கள் பழமை வாய்ந்தன?

114.விடைக்கேற்ற வினாவைத்தோந்தெடு 'சைவ நெறியிலிரந்து தமிழுக்குச் சாத்திர நூல்கள் கிடைத்தன"
அ)சை நெறியில் சாத்திழர நூலக்ள் கிடைத்ததா?
ஆ)சைவ நெறியிலிருந்து தமிழுக்கு என்ன கிடைத்தன?
இ)தமிழுக்குச் சாத்திர நூல்கள் எப்படிக் கிடைத்தது?
ஈ)சாத்திர நூல்கள் கிடைத்ததா?
விடை : ஆ)சைவ நெறியிலிருந்து தமிழுக்கு என்ன கிடைத்தன?
115.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடு
'ஆற்றங்கரைகளில் நாகரிகங்கள் தோன்றின"
அ)நாகரிகங்கள் எங்கே தோன்றின?
ஆ)ஆற்றங்கரைகள் எவ்வாறு இருந்தன?
இ)நாகரிகங்கள் அற்றங்கரையில் ஏன் தோன்றின?
ஈ)நாகரிகங்கள் எவ்வாறு தோன்றின?
விடை : அ)நாகரிகங்கள் எங்கே தோன்றின?

116.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு -'நன்மக்கள் பேறு பெற்றால நாட்டுக்கே நன்மை சேரும்
அ)நாட்டுக்கு என்ன பேறு சேரும்?
ஆ)நாட்டுக்கு நன்மக்கள் நன்மை சேர்ப்பரா?
இ)நன்மக்கள் பேறு ஏன் நன்மை சேர்க்கும்?
ஈ)நாட்டுக்கு எங்ஙனம் நன்மை சேரும் ?
விடை : ஈ)நாட்டுக்கு எங்ஙனம் நன்மை சேரும் ?

117.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக 'ஒழுக்கத்தைப் பபோற்று"
அ)கட்டளை
ஆ)அயற்கூற்று
இ)செய்தி வாக்கியம்
ஈ)உடன்பாடு
விடை : இ)செய்தி வாக்கியம்

118.'நீ உண்ணுதி"- இது எவ்வகை வாக்கியம்?
அ)ஏவல் வினைமுற்று
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)ஏவல் வினைமுற்று

119.'வாழ்க தமிழனம்" வளர்க தமிழ் மருத்துவம்!" இது எவ்வகை வாக்கியம் ?
அ)வியங்கேள் வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)வினா வாக்கியம
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஈ)உணர்ச்சி வாக்கியம்


120.'இன்னும் என்னென்ன நூல்கள் இருந்தனவோ" இது எவ்வகை வாக்கியம்?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)வியங்கோள் வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஈ)வினா வாக்கியம்




No comments:

Post a Comment