Thursday, 4 August 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக 'படி"
அ)படித்தல்
ஆ)படித்தான்
இ)படித்தவன்
ஈ)படித்து
விடை : இ)படித்தவன்

52.வேர்ச்சொல்லை தொழிற்பெயர் காண்க: 'நடி"
அ)நடித்தல்
ஆ)நடித்தான்
இ)நடித்தவன்
ஈ)நடித்த
விடை : அ)நடித்தல்

53.'கேள்" என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக
அ)கேட்டு
ஆ)கேட்டான்
இ)கேளு
ஈ)கேட்ட
விடை : அ)கேட்டு

54.வேர்ச்சொல்லை பெயரெச்சமாக்குக 'முடி"
அ)முடியா
ஆ)முடித்த
இ)முடிச்சு
ஈ)முடித்து
விடை : ஆ)முடித்த

55.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)சங்கு,சுக்கு,சொல்,சேறு,செளக்கியம், சோறு
ஆ)சங்கு,சுக்கு,சேறு,சொல்,சோறு,செளக்கியம்
இ)சுக்கு,சொல்,செளக்கியம்,சேறு,சங்கு,சோறு
ஈ)சொல்,செளக்கியம்,சோறு,சுக்கு,சங்கு,சேறு
விடை : ஆ)சங்கு,சுக்கு,சேறு,சொல்,சோறு,சௌக்கியம்

56.அகரவரிசைப்படுத்துக
அ)பண்பு,புலவர்,பொறுமை,பாசம்,பேராசசை
ஆ)பண்பு,பொறுமை,பேசராசை,புலவர்,பாசம்
இ)பண்பு,பாசம்,புலவர்,பேராசை,பொறுமை
ஈ)பேராசை,புலவர்,பாசம்,பண்பு,பொறுமை
விடை : இ)பண்பு,பாசம்,புலவர்,பேராசை,பொறுமை

57.பெயர்ச் சொல்லின் வகை அறிக சித்திரை
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

58.பெயர்ச் சொல்லின் வகை அறிக 'கிளை"
அ)குணப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

59.'வட்டம்" எவ்வகைப் பெயர் குறியிடுக
அ)குணப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற் பெயர்
விடை : அ)குணப்பெயர்

60.'நாற்காலி" பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட் பெயர்
ஆ)சினைப் பெயர்
இ)தொழிற் பெயர்
ஈ)காலப் பெயர்
விடை : அ)பொருட் பெயர்




No comments:

Post a Comment