Saturday, 13 August 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.'என் கடன் பணி செய்து கிடப்பதே" என கூறியவர்?
அ)திருஞானசம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)திருவாலவுடையார்
ஈ)திருத்தக்கத்தேவர்
விடை : ஆ)திருநாவுக்கரசர்

52.'புதுவைக்குயில்" என்று அழைக்கப்படுவர்?
அ)கண்ணதாசன்
ஆ)வாணிதாசன்
இ)பாரதிதாசன்
ஈ)காளிதாசன்
விடை : இ)பாரதிதாசன்

53.'உச்சி மேற்கொள் புலவர்"யார்?
அ)நச்சினார்க்கினியர்
ஆ)இளம்பூரணர்
இ)பாரதியார்
ஈ)காளிதாசன்
விடை : அ)நச்சினார்க்கினியர்

54.உத்தம சோழ பல்லவராயன் எனப் பட்டம் பெற்றவர்
அ)கம்பர்
ஆ)ஒட்டக்த்தர்
இ)சேக்கிழார்
ஈ)புகழேந்திப்புலவர்
விடை : இ)சேக்கிழார்

55.ஆசிரியர் இயற்றிய நூலைக் கண்டறிக கணிமேதையார்
அ)சிறு பஞ்சமூலம்
ஆ)நான்மணிக்கடிகை
இ)ஆசாரக்கோவை
ஈ)ஏலாதி
விடை : ஈ)ஏலாதி

56.'பட்டிணப்பாலை" நூலாசிரியர் பெயர் கண்டறிக?
அ)சமண முனிவர்
ஆ)உருத்திரங்கண்ணனார்
இ)ஒளவையார்
ஈ)இளங்கோவடிகள்
விடை : ஆ)உருத்திரங்கண்ணனார்

57.இத்தொடரை றிய சான்றோர்:
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்"
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்
விடை : அ)பாரதியார்

58.'ஒடி விளையாடு பாப்பா" என்று பாடியவர்
அ)நாமக்கல் கவிஞர்
ஆ)கவிமணியார்
இ)பாரதிதாசன்
ஈ)பாரதியார்
விடை : ஈ)பாரதியார்

59.'வைக்கம் வீரர்" என்று பாரட்டப்படுபவர்?
அ)அண்ணா
ஆ)பெரியார்
இ)காமராசர்
ஈ)ராஜாஜி
விடை : ஆ)பெரியார்

60.பட்டுக்கோட்டையார் என்று அழைக்கப்படுபவர்?
அ)கரிசல் குயில்
ஆ)கண்ணதாசன்
இ)கல்யாணசுந்தரம்
ஈ)மேத்தா
விடை : இ)கல்யாணசுந்தரம்




No comments:

Post a Comment