Friday, 12 August 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.தாமரை இலைத் தண்ணீர் என்னும் உவமை கூறும் பொருள்
அ)தாமரையும் தண்ணீரும்
ஆ)பட்டும் படாதுமிருத்தல்
இ)மிகுந்த ஈடுபாடு
ஈ)ஒன்று சேராதிருத்தல்
விடை : ஆ)பட்டும் படாதுமிருத்தல்

52.உவமையால் விளக்கப் பெறும் பொருத்து பொருளைத் தேர்க
கூர்மையரேனும் மரம் போல்வர்
அ)வலிமையில்லாதவர்
ஆ)அன்பில்லாதவர்
இ)பண்பில்லாதவர்
ஈ)தெளிவில்லாதவர்
விடை : இ)பண்பில்லாதவர்

53.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக
அகழ்குவாரைத் தாங்கும் நிலம் போல
அ)பொறுத்தல்
ஆ)புகழ்ந்து றுபவரை
இ)போற்றிப் புகழ்தல்
ஈ)களித்தல்
விடை : அ)பொறுத்தல்

54.கொடுக்கப்பட்டுள்ள உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிடுக
கனியிருப்பக் காய் கவர்ந் தற்று
அ)கனியை உண்ணல்
ஆ)பிறரைத் தூற்றிப் பேசாமை
இ)இனிய மொழி பேசல்
ஈ)கடுமொழி பேசல்
விடை : ஈ)கடுமொழி பேசல்

55.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளளைத் தேர்ந்தெடுக்க
அடுத்தது,காட்டும் பளிங்கு போல
அ)வைரம்
ஆ)கண்ணாடி
இ)இரத்தினம்
ஈ)முத்து
விடை : ஆ)கண்ணாடி

56.உவமைத் தொடர் விளக்கும் கருத்தை தெளிக
உள்ளங்கை நெல்லிக்கனி போல்
அ)சுவை
ஆ)பயன் தெளிவு
இ)கையழகு
ஈ)பழவகைகள்
விடை : ஆ)பயன் தெளிவு

57.கிணறு தோண்ட பூதம் கிளம்பியது போல உவமை கூறும் பொருள் தெளிக
அ)எதிர்பாராத நன்மை
ஆ)எதிர்பாராத தீமை
இ)எதிர்பாராத மகிழ்ச்சி
ஈ)எதிர்பார்த்த துன்பம்
விடை : ஆ)எதிர்பாராத தீமை

58.மடைதிறந்த வெள்ளம் போல
உவமை விளக்கும் பொருள் தேர்க
அ)விரைவு
ஆ)தெளிவு
இ)மதிப்பு
ஈ)குறைவு
விடை : அ)விரைவு

59.குடத்திட்ட விளக்கு போல
உவமைப்பொருளைத் தேர்க
அ)தெளிவு
ஆ)விளக்கம்
இ)மறைவு
ஈ)பரவுதல்
விடை : இ)மறைவு

60.உவமையை பொருந்த விளக்குதல்
நகமும் சதையும் போல்
அ)வேற்றுமை
ஆ)பசை
இ)பரிவு
ஈ)ஒற்றுமை
விடை : ஈ)ஒற்றுமை




No comments:

Post a Comment