Tuesday, 16 August 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.முதுமொழிகாஞ்சி பற்றிய சரியான கூற்று எது?
அ)காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று
ஆ)அறவுரைக்கோவை எனப்படுகிறது
இ)பத்து அதிகாரம்  நூறு பாடல்கள் கொண்டது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)அறவுரைக்கோவை எனப்படுகிறது

92.குழப்பெருமையைவிட எது மிகசிறந்தது என முதுமொழிக்காஞ்சி கூறுகிறது?
அ)அன்புடைமை
ஆ)புகழுடைமை
இ)ஒழுக்கமுடைமை
ஈ)செல்வமுடைமை
விடை : ஈ)செல்வமுடைமை

93.வண்மையில் சிறந்தன்று-------
அ)ஒழுக்கம் உடைமை
ஆ)கண்ணஞ்சப் படுதல்
இ)வாய்மையுடைமை
ஈ)மெய்பிணி இன்மை
விடை : இ)வாய்மையுடைமை

94.திரிகடுகத்தின் ஆசிரியர்----
அ)நல்லாதனார்
ஆ)கபிலர்
இ)நம்பூதனார்
ஈ)மாங்குடிமருதனார்
விடை : அ)நல்லாதனார்

95.செருஅடுதோள் நல்லாதன் என்ற கூற்றின் மூலம் நல்லாதன் ஒரு
அ)புலவர்
ஆ)அரசர்
இ)ஒற்றர்
ஈ)போர்வீரர்
விடை : ஈ)போர்வீரர்

96.தூற்றின்காண் தூவிய வித்து?
அ)முறைசெய்யான் பெற்ற தலைமை
ஆ)நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவம்
இ)நிறை ஒழுக்கம் தோற்றாதான் பெற்ற
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

97.தூஉயம் என்பார் தொழில்
அ)எண்பொழுது நீராடி உண்டல்
ஆ)என்பொறினும் பால்பற்றிச் சொல்லா விடுதல்
இ)தோல்வற்றிச் சாயினும் சான்றான்மை இன்றாமை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

98.நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் இவ்வழியில் வழி என்னும் பொருள்தரும் சொல்
அ)நில்லாமை
ஆ)நெறி
இ)உள்
ஈ)வனப்பு
விடை : ஆ)நெறி

99.இவர்களில் ஒளவையார் காலத்தை சேர்ந்த புலவர்?
அ)கம்பர்
ஆ)ஒட்டக்த்தர்
இ)புகழேந்திப்புலவர்
ஈ)அனைவரும்
விடை : ஈ)அனைவரும்

100.கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று) என்று ஒளவையார் யாருக்கு கூறுகிறார்?
அ)அரசர்
ஆ)மக்கள்
இ)புலவர்
ஈ)அமைச்சர்
விடை : இ)புலவர்




No comments:

Post a Comment