27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.'ஆடினான் பாடினன் ஆண்டும ஈண்டும் பாய்ந் தோடினன் உலாவினன் உவகைத்தேன் உண்டான்"
-அடி எதுகையைத் தேர்க
அ)ஆடினன் - ஆண்டும்
ஆ)ஆடினன் - ஈண்டம்பாய்நத
இ)ஆடினன் - உண்டான்
ஈ)ஆடினன் - தோடினன்
விடை : ஈ)ஆடினன் - தோடினன்

62.கீழ்க்காணும் பாடலில் உள்ள அடி எதுகையைச் சுட்டுக
'இன்னரும் பொழில்களும இணையிலா வளங்களும உன்னத மலைகளும் ஒறிர்தரு நாடு"
அ)இன்னரும் - உன்னத
ஆ)பொழிலகளும் - வளங்களும்
இ)மலைகளும் - வளங்களும்
ஈ)இன்னரும் - இணையில்லா
விடை : அ)இன்னரும் - உன்னத

63.பின்வரும் தொடரில் அமைந்துள்ள இயைபுத் தொடையைக் காண்க
'புதர்களை நாம் அழிப்பதிலே மிகழ வேண்டும் புத்துலகை உருவாக்க முயல வேண்டும்"
அ)மகிழ  - முயல
ஆ)வேண்டும் - வேண்டும்
இ)புதர்களை - புத்துலகை
ஈ)அழிப்பதிலே - உருவாக்க
விடை : ஆ)வேண்டும் - வேண்டும்

64.பின்வரும் தொடால் அமைந்துள்ள எதுகையை காண்க
'குன்றம் எந்திக் களிர்மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்"
அ)குன்றம்   - குளிர்மழை
ஆ)குன்றம்   - அன்று
இ)காத்தவன் - விரான்பரன்
ஈ)ஞாலம்   - அளந்த
விடை : ஆ)குன்றம்   - அன்று

65.'பேயொன்றா ளன்னை பிறர்நரியென் றார்தோழி நாயென்றாள் நீயென்றேன் நான் ' - அடி எதுகையைத் தேர்க
அ)பேயென்றாள் - நரியென்றாள்
ஆ)பேயென்றாள் - நாயென்றாள்
இ)நாயென்றாள் - நீயென்றேன்
ஈ)நரியென்றார் - நாயென்றாள்
விடை : ஆ)பேயென்றாள் - நாயென்றாள்

66.இயற்கை இன்பக்கலம் என்னும் பெருமைக்குரிய நூல்
அ)கலித்தொகை
ஆ)அகநானூறு
இ)புறநானூறு
ஈ)குறந்தொகை
விடை : அ)கலித்தொகை

67.இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை
அ)வளையாபதி , குண்டலகேசி
ஆ)சீவகசிந்தாமணி , சிலப்பதிகாரம்
இ)வளையாபதி ,மணிமேகலை
ஈ)சிலப்பதிகாரம் , மணிமேகலை
விடை : ஈ)சிலப்பதிகாரம் , மணிமேகலை

68.கல்வியில் பெரியவர் என் அழைகக்கப்பட்டவர்
அ)அப்பர்
ஆ)சுந்தரர்
இ)குமரகுரபரர்
ஈ)கம்பர்
விடை : ஈ)கம்பர்

69.சொல்லின் செல்வர் என்னும் சிறப்பு பெயருக்கு உரியவர்
அ)நெ.து.சுந்தரவடிவேலு
ஆ)ரா.பி.சேதுப்பிள்ளை
இ)மு.வரதராசனார்
ஈ)வா.செ.குழந்தைசாமி
விடை : ஆ)ரா.பி.சேதுப்பிள்ளை

70. கற்றறிந்தார் ஏத்தும் நூல் யாது?
அ)புறநானூறு
ஆ)கலித்தொகை
இ)அகநானூறு
ஈ)குறுந்தொகை
விடை : ஆ)கலித்தொகை




Comments