Friday, 12 August 2016

29.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.மணமக்கள்.....வாழ்க என வாழ்த்தினர்
அ)வேலி தாண்டிய வெள்ளபடாய்
ஆ)வெட்ட வெளிச்சமாய்
இ)நாயும் பேயுமாய்
ஈ)மலரும் மணமும் போல
விடை : ஈ)மலரும் மணமும் போல

72.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு
ஊருணி நீர் நிறைந்தற்றெ - இது எதற்கு உவமையாக வந்துள்ளது
அ)பெரியதொரு குளம்
ஆ)நிதி நிரம்பிய கருவூலம்
இ)அறிவுச் செல்வம் நிரம்பியவர்
ஈ)பெருந்தன்மையுடையவன் செல்வம்
விடை : ஈ)பெருந்தன்மையுடையவன் செல்வம்

73.உவமையால் விளக்கப் பெறும் கருத்தை அறிதல்
யானையால் யானையாத் தற்று
அ)எண்ணிய செயலை செய்து முடித்தல்
ஆ)முயற்சியின்மை
இ)ஒரு செயலைச் செய்து மற்றொரு செயலையும் முடித்தல்
ஈ)நினைத்த செயலை செய்யாமை
விடை : இ)ஒரு செயலைச் செய்து மற்றொரு செயலையும் முடித்தல்

74.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
தாமரை இலை நீர் போல
அ)பாசத்துடன் இருத்தல்
ஆ)புகழோடு இருத்தல்
இ)பற்றின்றி இருத்தல்
ஈ)பற்றோடு இருத்தல்
விடை : இ)பற்றின்றி இருத்தல்

75.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க- நுணலும் தன் வாயால் கெடும்
அ)சான்றேர்
ஆ)அன்றோர்
இ)பகைவர்
ஈ)அறிவிலி
விடை : ஈ)அறிவிலி

76.பின்வரும் உவமையால் விளக்கப்படும் பொருள் எது ?
நவில் தொறும் நூல்நயம் போலும்
அ)தீயார் நட்பு
ஆ)கணவன் மனைவி உறவு
இ)ஆசிரியர் மாணவர் தொடர்பு
ஈ)பண்புடையாளர் தொடர்பு
விடை : ஈ)பண்புடையாளர் தொடர்பு

77.பின்வரும் உவமையால் விளக்கப்படும் பொருள் எது?
பல்லுயிர் காத்த மருந்தெனா
அ)இயேசுநாதர்
ஆ)அல்லா
இ)மகாவீரர்
ஈ)சிவபெருமான்
விடை : அ)இயேசுநாதர்

78.நாய் பெற்ற தெங்கம்பழம் போன்று - இவ் உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
அ)கருமி தான் மட்டும் செலவு செய்வான்
ஆ)கருமியிடம் உள்ள செல்வம் செட்டியானது
இ)கருமியிடம் உள்ள பணம் யாருக்கும் பயன்படாது
ஈ)கருமியிடம் உள்ள பணம் பழைய பணம்
விடை : இ)கருமியிடம் உள்ள பணம் யாருக்கும் பயன்படாது

79.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு
உடுக்கை இழந்தவன் கை போல
அ)நண்பன்
ஆ)சுற்றம்
இ)துன்பம்
ஈ)நட்பு
விடை : ஈ)நட்பு

81.உவமையால் விளக்கப் பெறும் கருத்தை அறிதல்
வள்உகிர்ப் புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே
அ)படைகள் விட்டுவிலகுதல்
ஆ)படைகளெல்லம் ஒரு இடத்தில் திரளுதல்
இ)படைகளெல்லாம் செர்ந்து வருதல்
ஈ)படைகளெல்லாம் போர் மேற்கொள்ளல்
விடை : ஆ)படைகளெல்லம் ஒரு இடத்தில் திரளுதல்




No comments:

Post a Comment