Thursday, 11 August 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)கல்விக்குரியவள் சரஸ்வதி
ஆ)கல்விக்குரியவள் சரசுவதி
இ)கல்விக்குரியவள் கலைமகள்
ஈ)கல்விக்குரியவள் மலைமகள்
விடை : இ)கல்விக்குரியவள் கலைமகள்

12.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)கஷ்டம் உடையது வாழ்க்கை
ஆ);கட்டம் உடையது வாழ்க்கை
இ)தொல்லை உடையது வாழ்க்கை
ஈ)துன்பம் உடையது வாழ்க்கை
விடை : ஈ)துன்பம் உடையது வாழ்க்கை

13.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)வள்ளலார் ஜோதியை வழிப்பட்டார்
ஆ)வள்ளலார் சொதியை வழிப்பட்டார்
இ)வள்ளலார் விளக்கை வழிப்பட்டார்
ஈ)வள்ளலார் ஒளியை வழிப்பட்டார்
விடை : ஈ)வள்ளலார் ஒளியை வழிப்பட்டார்

14.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)சட்டம் ரத்து செய்யப்பட்டது
ஆ)சட்டம் மெருகேற்றப்பட்டது
இ)சட்டம் நீக்கப்பட்டது
ஈ)சட்டம் அமுலானது
விடை : இ)சட்டம் நீக்கப்பட்டது

15.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)சகல ஜனங்களும் வந்தனார்
ஆ)சகலவாசிகளும் வந்தனர்
இ)மக்கள் அனைவரும் வந்தனர்
ஈ)சகல மக்களும் வந்தனர்
விடை : இ)மக்கள் அனைவரும் வந்தனர்

16.கஷமித்தருள்க என்பதன் தமிழ்ச் சொல்
அ)மன்னித்தருள்க
ஆ)காப்பாற்றியரள்க
இ)இரட்சித்தருள்க
ஈ)காத்தருள்க
விடை : அ)மன்னித்தருள்க

17.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)குடமுழுக்கு
ஆ)பாலபிஷேகம்
இ)வழிபாடு
ஈ)தெய்வதரிசனம்
விடை : அ)குடமுழுக்கு

18.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)வருசக் கடைசி
ஆ)வருடக்கடைசி
இ)வருடக் கடசி
ஈ)ஆண்டுக் கடைசி
விடை : ஈ)ஆண்டுக் கடைசி

19.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)கும்பாயிஷேகம்
ஆ)குடஅபிசெகம்
இ)குடம் அபிசேகம்
ஈ)குடமுழுக்கு
விடை : ஈ)குடமுழுக்கு

20.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க
அ)தினசரி உடல பயிற்சி செய்
ஆ)நாள்தோறும் உடற்பயிற்சி செய்
இ)தினமும் உடற்பயிற்சி செய்
ஈ)தினமும் உடல் பயிற்சி செய்
விடை : ஆ)நாள்தோறும் உடற்பயிற்சி செய்




No comments:

Post a Comment