Friday, 12 August 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.உவமையால் விளக்கப் பெறும் கருத்தை அறிதல்
குடத்திலிட்ட விளக்கு
அ)அடக்கம்
ஆ)அடக்கமின்மை
இ)புகழ்ச்சி
ஈ)தற்பெருமை
விடை : அ)அடக்கம்

92.உவமையால் விளக்கப்படும் பொருள் யாது?
கயல் போன்ற
அ)கை
ஆ)கால்
இ)கண்
ஈ)மூக்கு
விடை : இ)கண்

93.காற்றுள்ள போதே தூற்றிக் கொள் - இதனால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?
அ)நேரத்தை வீணாக்காதே
ஆ)பொருட்களை காய வைத்துக் கொள்
இ)காற்று அழித்துவிடக் டியது
ஈ)காற்றுக்குப் பின் மழை வரும்
விடை : அ)நேரத்தை வீணாக்காதே

94.சிறு துளி பெரு வெள்ளம் - இதனால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?
அ)வருமுன் காத்தல்
ஆ)அடைமழை
இ)செலவ செய்ய அஞ்சாதே
ஈ)சேமிப்பு
விடை : ஈ)சேமிப்பு

95.மோனையினைக் கண்டறிக
இரு மனங்கள் கலக்கின்ற திருமணத்தில்
இன்பத்தின் மழைபொழியும் முகமிருக்கும்
அ)இருமனம் - இன்பம்
ஆ)கலக்கும் - இருமணம்
இ)கலக்கும் - திருமணம்
ஈ)இன்பம் - மழைபொழியும்
விடை : அ)இருமனம் - இன்பம்

96.அடிமோனை கண்டறிக:
சமுதாயம் திருந்திடவும் வேண்டும்
சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்
அ)சமுதாயம் - மலர்ந்திட
ஆ)சமுதயாம் - திருந்திட
இ)சமுதயாம் - சமுதாயம்
ஈ)சமுதாயம் - வேண்டும்
விடை : இ)சமுதயாம் - சமுதாயம்

97.சீர்மோனையினைக் கண்டறிக:
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி
அ)பசியும் - நீங்கி வளனும் - வாழ்த்தி
ஆ)பசியும் பிணியும் பகையும் சுரக்குகன
இ)பசியும் பிணியும் வசியும் வளனும்
ஈ)வாழ்த்தி சுரக்கென நீங்கி - பசியும்
விடை : இ)பசியும் பிணியும் வசியும் வளனும்

98.சீர்மோனையினைக் கண்டறிக:
சாதியெனும் சாக்கடையில் புழுப்போல நெளிந்து
சமயவெறிச் சழக்குகளில்  தடுமாறி வீழ்ந்து
அ)சாதி -சமயம்
ஆ)சழக்கு -புழு
இ)தடுமாறி - வீழ்ந்து
ஈ)சமயவெறி - நெளிந்து
விடை : அ)சாதி -சமயம்

99.மோனையமைந்த தொடரைக் கண்டு வட்டமிடுக
அ)வினையால் - வரும்
ஆ)என்பதம் - மக்கள்
இ)தம்பொருள் -தத்தம்
ஈ)மக்கள் - அவர்பொருள்
விடை : இ)தம்பொருள் -தத்தம்

100.கற்க கசடற் கற்பவை இதில் அமைந்துள்ள தொடை
அ)இயைபு
ஆ)மோனை
இ)எதுகை
ஈ)அளபெடை
விடை : ஆ)மோனை




No comments:

Post a Comment