Tuesday, 16 August 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித் என்ற செய்யுள் வரிகளில் தன்மை கள்வன் என கூறிக்கொண்டது யார்?
அ)இராமன்
ஆ)இலக்குமன்
இ)குகன்
ஈ)தசரதன்
விடை : இ)குகன்

22.இந்துவின் நுதலோளோடு யார்?
அ)இராமன்
ஆ)குகன்
இ)சீதை
ஈ)இலக்குமன்
விடை : இ)சீதை

23தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான் இதில் நயனம் என்பது பொருள்
அ)கண்கள்
ஆ)நெற்றி
இ)முகம்
ஈ)முடி
விடை : அ)கண்கள்

24.இவற்றில் சரியான கூற்று எது?
அ)இலக்குவன் குகனுக்கு தம்பி போன்றவன்
ஆ)இந்நன்னுதலவள் - சீதை
இ)நளிர்கடல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

25.பின்புள திடைமன்னும் பிரிவுளதென உன்னே என்ற செய்யுள் வரிகளில என்னேல் என்பதன் பொருள்
அ)உண்ணாதே
ஆ)அழாதே
இ)கவலைபடாதே
ஈ)நினைக்காதே
விடை : ஈ)நினைக்காதே

26.இவற்றில் புறநானூறு பற்றிய சரியான கூற்று எது?
அ)எட்டுத்தொகை நூலகளுள் ஒன்று
ஆ)புறநானூறு = புறம் + நான் + நூறு
இ)தமிழர்களன் வரலாறு,பண்பாடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

27.இவற்றில் தவறான கூற்று எது
அ)ஒளவையார் சங்கப் புலவர்
ஆ)ஒளவையார் அதியமானின் நண்பர்
இ)சங்கப்பாடல் பாடிய ஒளவையாரும் ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒருவரே
ஈ)ஒளவையார் நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றார்
விடை : இ)சங்கப்பாடல் பாடிய ஒளவையாரும் ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒருவரே

28.நிலம் எப்படி இருப்பதாக ஒளவையார் கூறுகிறார்?
அ)நாடாகு ஒன்றோ
ஆ)காடாகு ஒன்றோ
இ)அவலாகு ஒன்றோ
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

29.அவலாகு ஒன்றோ என்பதில் அவல் என்பது
அ)பள்ளம்
ஆ)மேடு
இ)காடு
ஈ)நிலம்
விடை : அ)பள்ளம்

30.புறானூறு மூலம் இதை அறியாலம்
அ)புலவர்களின் பெருமிதம்
ஆ)மக்களுடைய நாகரிகம்
இ)மக்களுடைய பண்பாடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment