Friday, 5 August 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.'கைப்புண்ணிற்குக் கண்ணாடி வேண்டாதது போல"
-இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக
அ)தெரியாது போதல்
ஆ)வலி ஏற்படுதல்
இ)சிவந்த போதல்
ஈ)தெளிவாகத் தெரிதல்
விடை : ஈ)தெளிவாகத் தெரிதல்

2.'ஊருணி நீர் நிறைந்திருத்தல் போல
-இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக
அ)அழியாது
ஆ)காத்திடு
இ)அழிவு உறுதி
ஈ)பார்த்துக்கொள்
விடை : ஆ)காத்திடு

3.'எரி முன்னர் வைத்தூறு போல"
-இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக
அ)அழியாது
ஆ)காத்திடு
இ)அழிவு உறுதி
ஈ)பார்த்துக்கொள்
விடை : இ)அழிவு உறுதி

4.'புனையா ஒவியம் போல"
-இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிக
அ)அழகு படுத்தாத
ஆ)அழகு படுத்திய
இ)வண்ணம் தீட்டிய
ஈ)வரையாத
விடை : அ)அழகு படுத்தாத

5.'செம்புலப் பெயல் நீர் போல"- இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது?
அ)சேராதிருத்தல்
ஆ)சேர்ந்ததன் தன்மையாதல்
இ)பிரிதல்
ஈ)கலவாதிருத்தல்
விடை : ஆ)சேர்ந்ததன் தன்மையாதல்

6.காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
- இவ்வடிகளிலுள்ள மோனையைச் சுட்டுக
அ)காலாழ் நரியடுங்
ஆ)களரின் நரியடுங்
இ)களரின் கண்ணஞ்சா
ஈ)நரியடுங் கண்ணஞ்சா
விடை : இ)களரின் கண்ணஞ்சா

7.பள்ளம் உயர் மேடா காதோ
பாறை பொடியாய்ப் போகாதோ" - இவ்வடிகளிலுள்ள இயைபைக் குறிக்க
அ)மேடாகாதோ போகாதோ
ஆ)போகாதோ போகாதோ
இ)பள்ளம் பாறை
ஈ)உயர் பாறை
விடை : அ)மேடாகாதோ போகாதோ

8.'ஒன்றா உலகத் துயர்ந்த புகடில்லாற் பொன்றாது நிறப்தொன்றில் - இவ்வடிகளிலுள்ள எதுகையைச் சுட்டுக
அ)உலக நிற்பது
ஆ)புகழல்லாற் பொன்றாது
இ)ஒன்றா பொன்றாது
ஈ)உலக புகழல்லால்
விடை : இ)ஒன்றா பொன்றாது

9.'முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினார்"இதில் அமைந்துள்ள மோனை யாது?
அ)முனிபவர் அரச்கியர்
ஆ)முறையின் நீங்கினார்
இ)அரக்கியர் முறையின்
ஈ)முனிபவர் முறையின்
விடை : ஈ)முனிபவர் முறையின்

10.நெறியான நற்செயல்கள் நாளும் செய்வோம்
நேர்மையுடன் ஒற்றுமையாய் இணைந்து வாழ்வேம் "
-இதிலுள்ள இயைபுத் தொடையை எழுதுக
அ)ஒற்றுமையாய் வாழ்வோம்
ஆ)செய்வோம் வாழ்வோம்
இ)நெறியான நேர்மையுடன்
ஈ)நாளும் ஒற்றுமையாய்
விடை : ஆ)செய்வோம் வாழ்வோம்



No comments:

Post a Comment