31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்"
அ)கலம்பகம் சிற்றிலக்கியமா?
ஆ)கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை?
இ)பல்லவ மன்னன் யார்?
ஈ)நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
விடை : ஈ)நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

2.'புலவரோ, பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அரசன் கூறினான்" எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)செய்தி வாக்கியம்
ஆ)அயற்கூற்று வாக்கியம்
இ)நேர்க்கூற்று வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : இ)நேர்க்கூற்று வாக்கியம்

3.'மாதவி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள் எவ்வகை வாக்கியம் எனக் சுட்டுக
அ)நேர்க்கூற்று வாக்கியம்
ஆ)அயற்கூற்று வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)அயற்கூற்று வாக்கியம்
விடை : ஈ)அயற்கூற்று வாக்கியம்

4.'செயற்கைக் கோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது" எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)செய்வினை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்

5.தூய்மையுடன் இரு, தன்னலமற்று இரு"- எவ்வகை வாக்கியம் எனச சுட்டுக
அ)செய்வினை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)விழைவு வாக்கியம்
விடை : ஈ)விழைவு வாக்கியம்

6.'ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)செய்தி வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)செயப்பாட்டு  வினை வாக்கியம்
ஈ)செய்தினை வாக்கியம்
விடை : ஈ)செய்தினை வாக்கியம்

7.தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
ஆ)கம்பரால் இராமாயணம் இயற்ற்ப்பட்டது
இ)கம்பர் இராமாயணத்தை இயற்றுவித்தார்
ஈ)இராமாயணம் கம்பர் இயற்றியது
விடை : அ)கம்பர் இராமாயணத்தை இயற்றினார்

8.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)மாதவி நடனம் கற்பித்தாள்
ஆ)மாதவி நடனம் கற்றாள்
இ)நடனம் மாதவியால் கற்பிக்கப்பட்டது
ஈ)நடனத்தை மாதவி கற்றாள்
விடை : அ)மாதவி நடனம் கற்பித்தாள்

9.செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக:
அ)நாடகம் மக்கள் பார்த்தது
ஆ);மக்கள் நாடகம் பார்த்தனர்
இ)மக்களால் நாடகம் பார்க்கப்பட்டது
ஈ)நாடகத்தை மக்களால பார்க்ப்பட்டது
விடை : ஆ);மக்கள் நாடகம் பார்த்தனர்

10.செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக:
அ)ஆசிரியர் என்னைப் பாராட்டினார்
ஆ)நான் ஆசிரியரால் பாராட்டப் பட்டேன்
இ)ஆசிரியர் பாராட்டினார் என்னை
ஈ)என்னை ஆசிரியர் பாராட்டினார்
விடை : ஆ)நான் ஆசிரியரால் பாராட்டப் பட்டேன்




Comments