Monday, 15 August 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.இவற்றில் தவறான இலக்கணக் குறிப்பு
அ)பாதமலர் - உவமைத்தொகை
ஆ)தொல்லுலகு - பண்புத்தொகை
இ)தாளமும் மோளமும் - எண்ணும்மை
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)பாதமலர் - உவமைத்தொகை

22.ஒன்று பெற்றால் ஒளி மயம் இவற்றில் பயின்றுவரும் ஆகுபெயர் எது?
அ)நீட்டல் அளவை ஆகுபெயர்
ஆ)முகத்தில் அளவை ஆகுபெயர்
இ)எடுத்தல்  அளவை ஆகுபெயர்
ஈ)எண்ணால் அளவை ஆகுபெயர்
விடை : ஈ)எண்ணால் அளவை ஆகுபெயர்

23.யாழ் கேட்டு மகிழ்ந்தாள் இத்தொடரில் பயின்று வரும் ஆகுபெயர் என்ன?
அ)சொல்லாகுபெயர்
ஆ)தானியாகுபெயர்
இ)கருவியாகுபெயர்
ஈ)காரியாவாகு பெயர்
விடை : இ)கருவியாகுபெயர்

24.கல்லா ஒருவற்கும்
அ)பண்புத்தொகை
ஆ)ஆகுபெயர்
இ)ஈறுகொட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ)தன்மைப் பன்மை வினைமுற்று
விடை : இ)ஈறுகொட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

25.பொருந்தாத இணையைக் கண்டறிக
அ)விளக்கி - வினையெச்சம்
ஆ)மகிழ்ச்சி - தொழிற்பெயர்
இ)சிறந்து - வினையெச்சம்
ஈ)இறைஞ்சி - தொழிற்பெயர்
விடை : ஈ)இறைஞ்சி - தொழிற்பெயர்

26.இவ்ற்றில் உயர்வுச் சிறப்பும்மையுடன் சேராத இலக்கணக்குறிப்பு எது?
அ)கருங்கோல்
ஆ)நிலத்தினும்
இ)வானினும்
ஈ)நீரிலும்
விடை : அ)கருங்கோல்

27.ஆய்ந்த பொற்கிழி
அ)தொழிற்பெயர்
ஆ)வினையெச்சம்
இ)பெயரெச்சம்
ஈ)பண்புத்தொகை
விடை : இ)பெயரெச்சம்

28.பொருந்தாத இணையைக் கண்டறிக
அ)புமைமலர் - வினைத்தொகை
ஆ)கிளத்தினேன் - தன்மை ஒருமை வினை முற்று
இ)தேராக்கீரன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ)நோக்கி - ஒருபொருட் பன்மொழி
விடை : ஈ)நோக்கி - ஒருபொருட் பன்மொழி

29.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளின் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க
செந்தீ,தேய்ந்த
அ)வினையெச்சம்,பண்புத்தொகை
ஆ)தொழிற்பெயர்,வினையாலணையும் பெயர்
இ)பண்புத்தொகை பெயரெச்சம
ஈ)பெயரெச்சம்,தொழிற்பெயா
விடை : இ)பண்புத்தொகை பெயரெச்சம

30.மாதவி ஆடல் கண்டு என்ற தொடரில் வரும் சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு மாறாத சரியான இணையை தேர்வு செய்க
அ)தொழிற்பெயர்,பெயர்ச்சொல்,வினைச்சொல்
ஆ)தொழிற்பெயர்,வினைச்சொல்,பெயர்ச்சொல்
இ)வினைச்சொல்,பெயர்ச்சொல்,தொழிற்பெயர்
ஈ)பெயர்ச்சொல்,தொழிற்பெயர்.வினைச்சொல்
விடை : ஈ)பெயர்ச்சொல்,தொழிற்பெயர்.வினைச்சொல்




No comments:

Post a Comment