Friday, 12 August 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.அடிஎதுகையினைக் கண்டறிக
இல்லாமை வறுமையவர்க்கு இயலாமை தீச்செயலே;
சொல்லாமை பொய்குறளை சோராமை பிறர்பயனே
அ)இல்லாமை - இயலாமை
ஆ)சொல்லாமை - தீச்செயல்
இ)இல்லாமை - சொல்லாமை
ஈ)வறுமை - பொய்க்குறள்
விடை : இ)இல்லாமை - சொல்லாமை

32.எதுகையினைக் கண்டறிக
மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியால் வென்று விடல்
அ)மிகுதி - மிக்கவை
ஆ)தகுதி - தாம்தம்
இ)மிக்கவை - செய்தார்
ஈ)மிகுதி - தகுதி
விடை : ஈ)மிகுதி - தகுதி

33.அறிவோர்க்கு, துறவோர்க்கு-இதில் அமைந்துள்ள தொடை
அ)எதுகை
ஆ)மோனை
இ)அடிமோனை
ஈ)செந்தொடை
விடை : அ)எதுகை

34.எதுகையினைத் தேர்ந்தெடுத்தல்
அன்பாகி அருளாகி அறிவாகி உலகுயிரின்
முன்பாகி ஒளியாகி முதலாகி முடியாத - எதுகை
அ)அன்பாகி - முன்பாகி
ஆ)அனபாகி - அருளகாகி
இ)முன்பாகி - ஒளியாகி
ஈ)அருளாகி - ஒளியாகி
விடை : அ)அன்பாகி - முன்பாகி

35.எதுகையினைக் கண்டறிக
நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று.
அ)நாணகத் - இயக்கம்
ஆ)இயக்கம் - மரப்பாவை
இ)நாணகத் - நாணால்
ஈ)நாணால் - உயிர்மருட்டி
விடை : இ)நாணகத் - நாணால்

36.அடிஎதுகையினைக் கண்டறிக
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
அ)அகழ்வார் - இகழ்வார்
ஆ)அகழ்வார் - தாங்கும்
இ)இகழ்வார் - பொறுத்தல்
ஈ)நிலம்போல -தம்மை
விடை : அ)அகழ்வார் - இகழ்வார்

37.எதுகையமைந்த தொடரைக் கண்டு வட்டமிடுக
அ)மிகுதியால் - வென்று
ஆ)மிகுதியால் - தகுதியால்
இ)மிகுதியால் - மிக்கவை
ஈ)மிக்கவை - செய்தாரை
விடை : ஆ)மிகுதியால் - தகுதியால்

38.எதுகைத் தொடையைத் தோந்தெழுதுக
உடுக்கை இழந்தவன் கைபோல ஆய்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
அ)உடுக்கை - இழந்தவன்
ஆ)உடுக்கை - கைபோல
இ)உடுக்கை - இடுக்கண்
ஈ)இடுக்கண் - நட்பு
விடை : இ)உடுக்கை - இடுக்கண்

39.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - எதுகை தேர்க
அ)வளம் - வாழ்வு
ஆ)எங்கள் - எங்கள்
இ)வாழ்வு - எங்கள்
ஈ)எங்கள் - வாழ்வு
விடை : ஆ)எங்கள் - எங்கள்

40.அடி எதுகையினைக் கண்டறிக
பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
செல்லாலே தன்மைத் யேர்படுக்கும்
அ)பொல்லாத -சொல்லி
ஆ)பொல்லாத - பேதை
இ)பொல்லாத - சொல்லாலே
ஈ)தன்னை - துயர்படுக்கும்
விடை : இ)பொல்லாத - சொல்லாலே




No comments:

Post a Comment