Thursday, 4 August 2016

35.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.'ஆடுகொடி" - இலக்கண குறிப்பு வரைக
அ)உவமைத் தொகை
ஆ)தொழிற்பெயர்
இ)ஆகுபெயர்
ஈ)வினைத்தொகை
விடை : ஈ)வினைத்தொகை

52.'வாழ்க" - இலக்கண குறிப்பு வரைக
அ)வியங்கோள் வினைமுற்று
ஆ)குறிப்பு வினைமுற்று
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)வியங்கோள் வினைமுற்று

53.'கேடு" - இலக்கண குறிப்பு தருக
அ)வினையாலணையும் பெயர்
ஆ)தொழிற்பெயர்குறிப்பு வினைமுற்று
இ)பண்புப்பெயர்
ஈ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்
விடை : ஈ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்

54.'பேரொளி" - இலக்கண குறிப்பு வரைக
அ)வினைத்தொகை
ஆ)வினையாலணையும் பெயர்
இ)பண்புத் தொகை
ஈ)உவமைத் தொகை
விடை : இ)பண்புத் தொகை

55.'உணரா" - இலக்கண குறிப்பு எழுதுக
அ)வினையெச்சம்
ஆ)பண்புத் தொகை
இ)ஈறுகெட்ட எதர்மறபை; பெயரெச்சம்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)ஈறுகெட்ட எதர்மறபை; பெயரெச்சம்

56.விடைக்கேற்ற வினாவைத் தேர்தெடுக்க
'பேரறிஞர் அண்ணா தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்"
அ)பேரறிஞர் அண்ணா எத்தகையவர்?
ஆ)அண்ணா சிறப்பாக வாழ்ந்தவரா?
இ)ஏன் அண்ணா பிறர்க்கென வாழ்ந்தார்?
ஈ)அண்ணா வாழ்ந்த போது என்ன செய்தார்?
விடை : அ)பேரறிஞர் அண்ணா எத்தகையவர்?

57.விடைக்கேற்ற வினாவைத் தேர்தெடுக்க
'காந்தியடிகள் மகாத்மா என அழைக்கப்பட்டார்"
அ)மகாத்மா என்பவர் யார்?
ஆ)எவ்வாறு மகாத்மா விளங்கினார்?
இ)யார் மகாத்மா என அழைக்கப்பட்டார்?
ஈ)காந்தியடிகள் என்ன செய்தார்?
விடை : இ)யார் மகாத்மா என அழைக்கப்பட்டார்?

58.'அடக்கம் அமரருள் உய்க்கும் " - விடைக்குரிய வினாவைத் தேர்ந்தெடுக்க
அ)எது அமரருள் உய்க்கும்?
ஆ)யார் அமரராவார்?
இ)அடக்கம் என்பது யாது?
ஈ)ஏன் அடக்கமாக இரக்க வேண்டும்?
விடை : அ)எது அமரருள் உய்க்கும்?

59.'முயற்சி திருவினையாக்கும்" விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
அ)முயற்சியின் விளைவு யாது?
ஆ)ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
இ)முயற்சியால் முடியாததுண்டோ?
ஈ)முயற்சி எதனையாக்கும்?
விடை : ஈ)முயற்சி எதனையாக்கும்?

60.'எளிது" எதிர்ச்சொல் தேர்க
அ)பெரிது
ஆ)சிறிது
இ)இனிது
ஈ)அரிது
விடை : ஈ)அரிது




No comments:

Post a Comment