Friday, 12 August 2016

36.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் - இது எவ்வகை எதுகை?
அ)கீழ்கதுவாய்  எதுகை
ஆ)மேற்கதுவாய் எதுகை
இ)முற்று எதுகை
ஈ)மோனை எதுகை
விடை : அ)கீழ்கதுவாய்  எதுகை

42.எதுகையை எடுத்தெழுது
வெந்தழற் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் கெட்டேன்!
அந்தமில் புகழா னன்புக் களவின்மை கண்டே னென்று
அ)வெந்தழல் அந்தமில்
ஆ)சுடர்வாள் வேந்தனை
இ)கண்டே,னென்று
ஈ)சுடர்வாள்,கண்டேன்
விடை : அ)வெந்தழல் அந்தமில்

43.எதுகை நயமுள்ள சொற்றொடர் எது?
அ)அறவோர்க்களித்தல் துறவோர் எதிர்தல்
ஆ)எனைததானும் நல்லவை
இ)கண்டு கேட்டு வந்தான்
ஈ)பறந்து வந்து விழுந்தது
விடை : அ)அறவோர்க்களித்தல் துறவோர் எதிர்தல்

44.எதுகை நயமுள்ள சொற்றொடர் எது?
அ)எனைத்தானும் நல்லவை கேட்க
ஆ)நன்னிற மென்முகை மின்னிடை வருத்தி
இ)வல்லா நடையின் மறுகிற் செல்வோன்
ஈ)ஆழ நெடுந்திரையாறு கடந்திவர்
விடை : ஆ)நன்னிற மென்முகை மின்னிடை வருத்தி

45.சீரைத் தந்த தமிழே வாழ்க
ஓரா உலகின் ஒளியே வாழ்க
இதில் வாழ்க வாழ்க என்பது எத்தகைய தொடை?
அ)மோனை
ஆ)எதுகை
இ)அடியியைபு
ஈ)அடிமோனை
விடை : இ)அடியியைபு

46.இயைபு கண்டறிக
வாழிய தேவபிரான்
எங்கும் நிறைந்த பிரான்
அ)தேவபிரான் - வாழிய
ஆ)வழிய - நிறைந்தபிரான்
இ)எங்கும் - தேவபிரான்
ஈ)தேவபிரான் - நிறைந்த பிரான்
விடை : ஈ)தேவபிரான் - நிறைந்த பிரான்

47.இயைபுத் தொடை கண்டறிக
சாதியெனும் சாக்கடையில் புழுப்போல வாழ்ந்து
சமயவெறிச் சழக்குகளில் தடுமாறி வீழ்ந்து
அ)சாதியெனும் - சாக்கடையில்
ஆ)வாழ்ந்து - வீழ்ந்து
இ)புழுப்போல - தடுமாறி
ஈ)சாதியெனும்-சமயவெறிச்
விடை : ஆ)வாழ்ந்து - வீழ்ந்து

48.அடி இயைபு கண்டறிக
சோறு மணக்கும் மடங்களெலாம்
தூய்மை மணக்கும் சிந்தையெலாம்
அ)சோறு -மடங்ளெலாம்
ஆ)தூய்மை - சிந்தை
இ)மணக்கும் - மடங்களெலாம்
ஈ)மடங்களெலாம் - சிந்தையெலாம்
விடை : ஈ)மடங்களெலாம் - சிந்தையெலாம்

49.இயைபுத் தொடை அமைந்த சொற்களை எழுதுக
அ)கற்கை நன்றே கற்கை நன்றே
ஆ)அழக் கொண்ட எல்லாம்
இ)என்றும் ஒருவுதல் வேண்டும்
ஈ)வேண்டுதல வேண்டாமை இலானடி
விடை : அ)கற்கை நன்றே கற்கை நன்றே

50.தேனினும் தித்திக்கும் சொல்லினாள் - என்னைத் தேற்றி மகனெனப் புல்லினாள்
இதில் பயின்று வரும் தொடை யாது?
அ)மோனை
ஆ)இரண்டடைத் தொடை
இ)எதுகை
ஈ)இயைபு
விடை : ஈ)இயைபு




No comments:

Post a Comment